உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி டார்ச்சரால் ஓடியது அம்பலம்

மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி டார்ச்சரால் ஓடியது அம்பலம்

பெங்களூரு : திடீரென காணாமல் போன மென்பொறியாளர் ஒருவர், உ.பி., மாநிலம் நொய்டாவில் கண்டுபிடிக்கப்பட்டார். அவராகவே வீட்டை விட்டு சென்றது தெரிந்தது.உத்தர பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் விபின் குப்தா, 34. இவர் பெங்களூரின், கொடிகேஹள்ளியின் டாடா நகரில் வசிக்கிறார். மான்யதா டெக்பார்க்கில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு சென்ற விபின் குப்தா திரும்பவில்லை. இவருக்கு தனியாக ஊர், ஊராக சுற்றும் பழக்கம் இருந்தது. பல முறை வீட்டை விட்டு சென்று, சில நாட்களுக்கு பின் வீட்டுக்கு வருவார். எனவே, கணவர் தானாகவே வருவார் என, மனைவி ஸ்ரீபர்ணா நினைத்தார். ஆனால், கணவர் வரவில்லை. மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால் பீதி அடைந்த மனைவி, தன் கணவரை தேடி தரும்படி கொடிகேஹள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். கணவருக்கு யாராலோ ஆபத்து என, சந்தேகம் தெரிவித்தார். போலீசார் அலட்சியம் காட்டியதால், வீடியோ வாயிலாக கமிஷனருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விபின் குப்தாவை தேடினர்.இதில், அவர் உ.பி., மாநிலம் நொய்டாவில் இருப்பதை கண்டுபிடித்தனர். கொடிகேஹள்ளி போலீசார் நொய்டாவுக்கு சென்று, அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். விசாரித்த போது, தானாக விரும்பியே வீட்டை விட்டு சென்றதாக கூறினார்.விபின் குப்தாவுக்கு 34 வயது. இவரது மனைவி ஸ்ரீபர்ணாவுக்கு 42 வயது. மனைவி தன்னை விட, வயதில் பெரியவராக இருந்ததால், விபின் குப்தா மன வருத்தத்தில் இருந்தார். மனைவியும் இவரை மனரீதியில் இம்சித்துள்ளார். கணவர் தன்னை விட இளையவர் என்பதால், சந்தேக கண்ணோடு இருந்துள்ளார். கணவரை கண்காணிக்க, வீடுகளில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.மனைவியின் செயலால் விரக்தி அடைந்த விபின் குப்தா, வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டின் அருகில் இருந்த வங்கியில், 1.80 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு நொய்டாவுக்கு சென்றதை ஒப்புக்கொண்டார். இவரை மனைவியிடம் ஒப்படைக்க போலீசார் தயாராகின்றனர்.ஆனால் விபின் குப்தா, 'வேண்டுமானால் என்னை சிறையில் கூட அடையுங்கள். ஆனால், வீட்டுக்கு மட்டும் செல்ல மாட்டேன்' என பிடிவாதம் பிடிக்கிறார். அவரை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
ஆக 18, 2024 09:41

இதில் இருந்து அறிவது என்ன வென்றால் பெண்கள் மிகவும் மாறி விட்டார்கள் அப்புறம் இந்த கல்யாணம் என்ற சம்பிரதாயத்தில் நம்பிக்கை போயந்தே அதுனால இனி கல்யாணம் என்பது அளித்து விடும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது ஒருவகையில் நாட்டுக்கு நல்லது தான் ஜனத்தொகை குறையலாம்


Sck
ஆக 17, 2024 12:59

34 வயது இளைஞனுக்கு தெரியவில்லையா இது ஒத்து வராதுனு. அப்ப free கிடைத்த காமம் கண்ணை மறைத்து விட்டதா? மடத்தனம்.


Anonymous
ஆக 17, 2024 12:17

இதே கணவன் கொடுமை தாங்க முடியாத மனைவி, வீட்டை விட்டு இப்படி போக முடியுமா? அப்படியே போனால் , அவரை அந்த கணவன் திரும்ப ஏற்று கொள்ள தயாராக இருப்பாரா? ஆண்கள் என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம், என்ற ஆணாதிக்க மனப்பான்மை இருக்கும் வரை இப்படி தான் இருக்கும், மனைவி தன்னை விட வயதில் மூத்தவர் என்று தெரிந்து தானே மணமுடித்திருப்பார்? இப்போ என்ன புதுசா மன உளைச்சல்? அதுவும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு..... ஆணாதிக்கத்தின் உச்சம்.


Radhakrishnan Seetharaman
ஆக 17, 2024 12:04

வங்காளப் பெண்கள் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்


Sck
ஆக 17, 2024 12:56

அந்த பெண் வங்காளி என்று எதை வைத்து சொல்கிறீர்கள்.


subramanian
ஆக 17, 2024 11:10

வீட்டிலும் சரி, எங்கு போனாலும் சரி அவரின் நிம்மதியை கெடுத்து விட்டார் அவரின் மனைவி என்று கூறி கொள்ள கொள்பவர். சக மனிதனை புரிந்து கொள்ள இயலாத ஜன்மம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ