உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / விடுப்பு எடுக்காமல் சென்ற மாணவர்கள் விமானத்தில் பயணம்

விடுப்பு எடுக்காமல் சென்ற மாணவர்கள் விமானத்தில் பயணம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின் தங்கிய மாணவர்களே பெரும்பாலானோர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்சக ஆசிரியர்கள் இணைந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல், தொடர்ந்து பள்ளிக்கு ஒரு நாள் கூடவிடுமுறை எடுக்காமல் வரும் மாணவ - மாணவியரை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர்.அதன்படி, விடுமுறை எடுக்காமல் வந்த 9 மாணவ - மாணவியரை,பெற்றோர் அனுமதியுடன், சென்னையில் இருந்து பெங்களூரு வரை, விமானத்தில் அழைத்துச் சென்று வந்துள்ளனர்.இதன் வாயிலாக, தற்போது நடைபெற இருக்கின்ற மாணவர் சேர்க்கையில், அதிக மாணவர்கள் பள்ளியில் சேருவர் எனஎதிர்பார்க்கப்படுகிறது.மேலும், மாணவர்களும் தேவையில்லாமல் விடுமுறை எடுக்காமல், ஒழுக்கமாக பள்ளிக்கு வருவர் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ