மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
விஜயபுரா : கர்நாடகாவில், பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்த, காளை மாடு 18 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், விஜயபுரா பபலேஸ்வர் பாபலாடி கிராமத்தில் வசிப்பவர் ரமண கவுடா பாட்டீல். இவர் 5.5 அடி உயரமுள்ள காளை மாட்டை வளர்த்தார். வட மாவட்டங்களில் நடக்கும் தேரபந்தி எனும் காளை ஓட்ட பந்தய போட்டிகளில், இந்த காளை மாடு பங்கேற்று, பல பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை 15 லட்சம் ரொக்கம்; 40 கிராம் தங்கம்; இரண்டு வெள்ளி மாலைகள்; நான்கு பைக்குகளை இந்த காளை மாடு வென்றுள்ளது. இந்நிலையில், பெலகாவியின் ராய்பாக் ஹிட்னல் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவா என்ற விவசாயியை, இந்த காளை மாடு கவர்ந்தது. அந்த காளை மாட்டை வாங்க, உரிமையாளர் ரமண கவுடா பாட்டீலிடம் கேட்டார். அவரோ, 'காளையை விற்பதில்லை' என்று கூறிவிட்டார். ஆனாலும், சதாசிவா தொடர்ந்து வற்புறுத்தியதால், காளையை விற்க ஒப்புக்கொண்டார். இறுதியாக, 18 லட்சத்து 100 ரூபாய் கொடுத்து, சதாசிவா நேற்று காளையை வாங்கி சென்றார்.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1