வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாயை விட கேவலம் ...
ஒரு தடவை நடந்தால் அது திருமணம். இவர்கள் இருவரும் செய்தது....
மேலும் செய்திகள்
எடியூரப்பா கைதுக்கு தடை; செப்., 5 வரை நீட்டிப்பு
31-Aug-2024
பெங்களூரு:குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடந்த விசாரணையின் போது, தன் மனைவிக்கு எட்டு கல்யாணம் நடந்துள்ளதாக கணவர் தரப்பு குற்றஞ்சாட்ட, 'அவர் சொல்வது பொய்... நாலு தான் நடந்திருக்கு' என மனைவி தரப்பு மறுத்துள்ளது.கர்நாடக மாநிலம், விஜயநகராவின் ஹொஸ்பேட்டைச் சேர்ந்தவர் ராஜா உசேன். இவர் மீது, மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக, குடும்ப வன்முறை வழக்கு பதிவானது. வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.கொடுமைமனு மீது விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'என் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு, அடிப்படை முகாந்திரம் இல்லை. இவரது மனைவி, மனுதாரர் உட்பட எட்டு பேரை திருமணம் செய்துள்ளார்.'என் மனுதாரர் தான் கடைசி கணவர். ஏற்கனவே நடந்த ஏழு திருமணம் பற்றி கேட்டதால், கொடுமைப்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்' என்றார்.மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், 'மனுதாரர் கூறுவது முற்றிலும் பொய். அவரது மனைவி எட்டு திருமணம் எல்லாம் செய்யவில்லை; நான்கு திருமணம் தான் செய்துள்ளார். 'முதல் கணவர் இறந்த பின், அடுத்து மூன்று திருமணங்கள் செய்துள்ளார். மனுதாரர் தான் கடைசி கணவர். பொய் கூறும் கணவர் மீது, அவதுாறு வழக்கு தொடர உள்ளோம்' என்றார்.உத்தரவுமனுதாரர் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, 'அப்பெண் எட்டு திருமணம் செய்ததற்கு, எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. கடந்த முறை நடந்த விசாரணையின் போது, மனுதாரர் உட்பட ஐந்து கணவர்கள் ஆஜராக வந்தனர்.'ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. திருமணம் என்ற பெயரில் எட்டு பேரை அப்பெண் ஏமாற்றி உள்ளார். அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்; அன்று, எட்டு திருமணம் செய்தது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் கூறினார்.
நாயை விட கேவலம் ...
ஒரு தடவை நடந்தால் அது திருமணம். இவர்கள் இருவரும் செய்தது....
31-Aug-2024