உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மூன்று ஆண்டுகளாக உரிய சான்று பெறாமல் இயங்கும் 11 புதிய அரசு மருத்துவமனைகள்

மூன்று ஆண்டுகளாக உரிய சான்று பெறாமல் இயங்கும் 11 புதிய அரசு மருத்துவமனைகள்

விருதுநகர்: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட, 11 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, நகராட்சி, மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ்கள் பெறப்படாமல் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன., 12 முதல் செயல்படுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ouxte1r0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்டுமான பணிகள் துவங்க, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ், பணிகள் முடிவடைந்த பின் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முழுமை பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.அதே போல, தீத்தடுப்பு வசதிகள், தீயணைப்பு வாகனங்களின் மீட்பு பணிகளுக்கு தேவையான இடவசதிகள் வளாகத்தில் இருப்பதை ஆய்வு செய்த தடையில்லா சான்றிதழ், நகராட்சி, மாநகராட்சியால் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் கட்டுமான பணிகளை செய்த நிறுவனம், முறையாக பணிகளை முடித்ததால் அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், மருத்துவமனைகளில் கட்டுமான பணிகளை செய்த ஒப்பந்த நிறுவனம், பணிகளை முறையாக முடிக்கவில்லை. இருப்பினும், 11 அரசு மருத்துவமனைகளும் அவசர கதியில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.இந்த மருத்துவமனை கட்டடங்களை பொதுப்பணித் துறை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவில்லை. தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சியால் வழங்கப்படும் எவ்வித சான்றிதழ்களும் இல்லாமல் மூன்று ஆண்டுகளாக 11 புதிய அரசு மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு ஆவணங்களை கேட்ட போது தான், இந்த சான்றிதழ்கள் எதுவுமே பெறாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகங்கள் சார்பில், தற்போது அந்தந்த துறைகளில் தடையில்லா சான்றிதழ்கள் பெறும் முயற்சி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gnanasutha
மே 29, 2025 15:01

அது தவறு தான் அதற்கான ஏற்பாடுகளை அதற்கு உரிய அதிகாரிகள் பார்த்திருக்க வேண்டும். தாமதிக்கிறார்கள் அதை விடுங்கள். நம்ம தோப்பூர் ஏம்ஸ் கட்டிடம் முடிந்ததா ஒரு அப்டேட் போடுங்கள். ஏன் என்றால் கட்டடம் இல்லாமல் இந்த ஆண்டு மூன்றாவது வருடம் மாணவர்கள் சேர போகிறார்கள். கட்டடம் இல்லாமலே மூன்று வருடம் மருத்துவ கல்லூரி நடைபெறும் போது இந்த சான்றிதழ் இல்லாமல் நடப்பது ஒன்றும் அத்தனை பெரிய சாதனை ஒன்றும் இல்லை.


Bhaskaran
மே 28, 2025 11:23

அரசு கட்டடங்களுக்கு சான்றிதழ் வழங்கினால் பத்து பைசா கூட பெயராது என்கிற எண்ணம் உள்ள அதிகாரிகளால் தாமதம்


lana
மே 28, 2025 11:22

அதெல்லாம் ஒன்றும் இல்லை. contract முந்தைய ஆட்சியில் கொடுத்தது. இன்றைய ஆட்சிக்கு பங்கு குடுக்காம இருந்ததால் எந்த certificate உம் contractor க்கு கொடுக்க வில்லை. அவரும் வேலை முடிந்ததும் கிளம்பி விட்டார். இப்போது மத்திய அரசு கேட்டால்தான் இவர்கள் தூக்கம் கலைந்து எழுவார்கள். இப்போது பாருங்கள் ஒன்றிய அரசு சதி. தமிழக கல்வி உரிமை பறிப்பு பருப்பு ன்னு உருட்டு வார்கள். அதுக்காக இரவு விவாதம் நடக்கும்.


Rengaraj
மே 28, 2025 11:10

கேடுகெட்ட அரசின் நிர்வாக திறன் இன்மைக்கு மற்றுமொரு சான்று. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தராத அரசு கண்டிப்பாக ஒழிக்கப்படவேண்டும். பணத்தை கொள்ளை அடித்து கோடிகோடியாக சேர்க்க தெரிந்த அரசியல்வாதிகளுக்கு ஒத்துஊதும் அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தக்க தண்டனை தரவேண்டும். மற்றும் இது குறித்து எந்த ஒரு விவாதமும் நடத்தாமல் ஜால்ரா அடிக்கும் ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும்.


Sundaran
மே 28, 2025 07:52

திருட்டு திராவிட மாடல் அரசின் மற்றோரு சாதனை இது


Sundaran
மே 28, 2025 07:52

திருட்டு திராவிட மாடல் அரசின் மற்றோரு சாதனை


VENKATASUBRAMANIAN
மே 28, 2025 07:51

இதுதான் திராவிட மாடல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


S.V.Srinivasan
மே 28, 2025 07:38

திராவிட மாடல் அரசுல இதெல்லாம் சகஜமப்பா. துட்டு, மனி , காசு, பைசா அவ்வளவுதான். எத்தனை சான்றிதழ் வேணுமானாலும் கிடைக்கும்.


Varadarajan Nagarajan
மே 28, 2025 06:54

சாதாரண தனியார் குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடங்களை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதற்குமுன் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களும் பெறவேண்டும். அப்படி ஏதாவதுஒரு சான்றிதழ் பெறவில்லையென்றாலும் அதை சட்டவிரோத குடியேற்றம் என அரசு நோட்டீஸ் அனுப்புகிறது. அப்படியிருக்கும்போது அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாதா. அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்களை மூடிக்கொள்வார்களா. இந்த சான்றுகள் இல்லாமல் அரசே திறப்புவிழா செய்தது சட்டவிரோதமாக எடுத்துக்கொண்டு நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்மீதும் நடவடிக்கையெடுக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் பல விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதனால் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் எனவும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதையும் நீதிமன்றம் கருத்தில்கொள்ளவேண்டும். இதற்க்காகத்தான கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க அத்தனை பாடுபடுகிறார்கள்.


உண்மை கசக்கும்
மே 28, 2025 06:52

பொது மக்களை சாவடிக்கும் ஸ்டாலின் மா சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை