உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ரூ.ஒரு கோடி பரிசு

காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ரூ.ஒரு கோடி பரிசு

மூணாறு : மூணாறில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ரூ. ஒரு கோடி பரிசு விழுந்தது.மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்குடி டிவிஷனைச் சேர்ந்தவர் பரமசிவன் 45. தனியார் தங்கும் விடுதி ஊழியரான பரமசிவன் பழநிக்கு மாலையிட்டு நேற்று முன்தினம் காலை மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 245 பேர் கொண்ட குழுவுடன் புறப்பட்டார். அவருடன் மகன்கள் பரத், ரஞ்ஜித் ஆகியோரும் சென்றனர். போகும் வழியில் மூணாறில் இருந்து 3 கி.மீ., தொலைவில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்தவர் அங்கு லாட்டரி விற்றவரிடம் கேரள அரசின் பிப்டி, பிப்டி லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதன் பிறகு பயணத்தை தொடர்ந்தவர் 42 கி.மீ., நடந்து மாலையில் மறையூருக்கு சென்றபோது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் காலையில் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு ரூ. ஒரு கோடி விழுந்ததை மாலை 6:30 மணிக்கு அறிந்தார். அதனை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்தவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.பரமசிவத்திற்கு சொந்தமாக வீடு இல்லை. பரிசு தொகையில் வீடு கட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ