உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சாலையில் கிடந்த 20 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்

சாலையில் கிடந்த 20 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்

திருவாரூர்: சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதி, குடும்பத்தினருடன், நேற்று காலை, திருவாரூர், விருப்பாட்சி நடப்பு தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து, ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்த பை, ஆட்டோவில் இருந்து வழியில் தவறி விழுந்து விட்டது. இந்நிலையில், துாய்மை பணியாளர் துரை என்பவர், விருப்பாட்சி நடப்பு சாலையில் கிடந்த பையை எடுத்து, போலீசில் ஒப்படைத்தார். அதில் இருந்த, 20 சவரன் நகை, வெள்ளி பொருட்களை, ராதாகிருஷ்ணனிடம், இன்ஸ்பெக்டர் சந்தானமேரி ஒப்படைத்தார். துாய்மை பணியாளர் துரையின் நேர்மையை, போலீசார், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அதேபோல, திருப்பூர் மாவட்டம், உகாயனுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; சலவைத் தொழிலாளி. அவரிடம், இஸ்திரி செய்ய வழங்கப்பட்ட சேலையில் இருந்த, 5 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

bharathi
பிப் 09, 2026 17:32

How such things happen every day...people careless?? or something for a show


சத்யநாராயணன்
பிப் 09, 2026 15:16

ஏதோ ஒரு புதிய நாடகம் அரங்கேரி கொண்டு இருப்பதை போன்று தான் தோன்றுகிறது இந்த செய்தியில் எதுவும் நம்பும்படியாக இல்லை


அன்பே சிவம்
பிப் 09, 2026 05:35

1).வறுமையிலும் செம்மையாக வாழும் உயர் குடி மக்கள் இவர்கள். 2). தர்மம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது.


Govi
பிப் 09, 2026 03:53

தங்கம் விற்கும் விலையில் இப்ப டி எப்படி தொலைக்கிறார்கள் அதுவும் கண்டெடுக்கும் எல்லாரும் காவல்நிலயத் தில ஒப்படைப்பு .....?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை