மேலும் செய்திகள்
சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி மூடப்பட்ட உணவு நிறுவனம்
25-Nov-2025 | 2
உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் ஹாட்ரிக் வெற்றி
17-Nov-2025 | 6
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, அரசு டவுன் பஸ்சில் பக்கவாட்டில் இருந்த, பாதுகாப்பு இரும்பு கம்பி நடுவழியில் உடைந்து விழுந்தது. கமுதி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும், 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கமுதியில் இருந்து அபிராமம் வழியாக பரமக்குடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று எட்டுக்கண் பாலம் அருகே சென்ற போது, அந்த பஸ்சின் பக்கவாட்டு பாதுகாப்பு இரும்பு கம்பி உடைந்து ரோட்டில் விழுந்து உரசியபடி சென்றது. கண்டக்டர், அந்த இரும்பு கம்பியை கையில் பிடித்தபடி பஸ் ஸ்டாண்ட் வரை சென்றார்.
25-Nov-2025 | 2
17-Nov-2025 | 6