உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை

நாகர்கோவில்: அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரிகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருவதோடு, பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அண்øமையில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயமானதை தொடர்ந்து அவரை கண்டு பிடிக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். முளகுமூடு பகுதியில் இவர் ரோடு அமைக்கும் பணியை 45 ஆயிரம் ரூபாய் காண்டிராக்ட் எடுத்து செய்து முடித்தார். இதற்கான பில் சமர்ப்பித்த பின்னரும் பணம் கிடைக்கவில்லை. மேலும் பேரூராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் இரண்டு விதமான பில் கேட்டுள்ளதோடு பணமும் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என்ற போர்டுடன் கலெக்டர் அலுவலகம் அருகே தட்டு வைத்து பிச்சை எடுத்தார். நேசமணி நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் பற்றியும் அவர்கள் கேட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ