உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கோபி மஞ்சூரியனுக்கு கோவாவில் தடை

கோபி மஞ்சூரியனுக்கு கோவாவில் தடை

பணஜி, சைவ பிரியர்களின் விருப்ப உணவான கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்து, கோவாவின் மாபுசா நகரம் உத்தரவிட்டுள்ளது.அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் என்றால், சைவ பிரியர்களுக்கு, கோபி மஞ்சூரியன் தான் விருப்ப உணவு. காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உணவை, சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவர்.இந்நிலையில் கோவாவில் உள்ள மாபுசா நகரத்தில், கோபி மஞ்சூரியன் உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் அதன் சுகாதார பிரச்னைகள் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, அந்த உணவுக்கு தடை விதிக்கப்படுவதாக, மாபுசா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிப்பது இது முதன்முறை அல்ல. கடந்த 2022ல், கோபி மஞ்சூரியனுக்கு மர்மகோவா நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை