உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தினமலர் சந்தாவால் கிடைத்த காப்பீடு; உரிய நேரத்தில் உதவியதாக நெகிழ்ச்சி

தினமலர் சந்தாவால் கிடைத்த காப்பீடு; உரிய நேரத்தில் உதவியதாக நெகிழ்ச்சி

மதுரை: 'தினமலர்' நாளிதழ் ஆண்டு சந்தா செலுத்தியதன் பயனாக கிடைத்த விபத்து காப்பீட்டு தொகை, உரிய நேரத்தில் கைகொடுத்ததாக, மதுரை ஊமச்சிக்குளம் வாசகர், நெகிழ்ச்சி தெரிவித்தார். மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் வாசகர் ராமசாமி கூறியதாவது: தனியார் கம்பெனியில் கணக்காளராக பணிபுரிகிறேன். பத்தாண்டு கால தினமலர் வாசகன். கடந்தாண்டு, தமுக்கத்தில் நடந்த தினமலர், 'ஷாப்பிங் எக்ஸ்போ'வில், 1,999 ரூபாய்க்கு ஆண்டு சந்தா செலுத்தினேன். கடந்த ஆண்டு அக்., 26ல் கடச்சனேந்தல் அருகே விபத்தில் சிக்கினேன். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்து, 'பிளேட்' பொருத்த 3 லட்சம் ரூபாய் வரை செலவானது. ஏற்கனவே, நான் விபத்து காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தி வந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், சில காரணங்களை கூறி பணம் வழங்க மறுத்தது. அப்போது, தினமலர் ஆண்டு சந்தா செலுத்தியதன் பயனாக கிடைக்கப்பெற்ற விபத்து காப்பீடு விபரங்களை, என் 'வாட்ஸாப்'பில் பார்த்தேன். தினமலர் அலுவலக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் வாயிலாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வீட்டிற்கே வந்து, என்னை விசாரித்தனர். இரண்டே நாளில், 1 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை வழங்கினர். தொகை கிடைக்கும் வரை, ஒருங்கிணைத்து உதவிய தினமலர் அலுவலக நிர்வாகிகளுக்கு நன்றி. பணிக்கு செல்ல முடியாமல் 3 மாதம் வருமானமின்றி நிதிச்சுமையில் இருந்த சூழலில், இந்த விபத்து காப்பீட்டுத் தொகை பேருதவியாக இருந்தது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை