உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்

தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்

வால்பாறை: வால்பாறை - அதிரபள்ளி ரோட்டில், தும்பிக்கை இழந்த குட்டியானைக்கு தாய் யானை உணவு வழங்கி தன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அதிரப்பள்ளி வனப்பகுதியில், கடந்த ஆண்டு தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்று, யானைகள் கூட்டத்தில் இருப்பதை கேரள வனத்துறையினர் கண்டறிந்தனர். அதன் பின் குட்டி யானையின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம், 20ம் தேதி வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் தும்பூர் என்ற இடத்தில், தும்பிக்கை இல்லாத குட்டியானை பிற யானைகளுடன் ரோட்டை கடந்து செல்வதை, அந்த வழியாக சென்ற சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையின் ஆரோக்கியம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வால்பாறை அதிரப்பள்ளி ரோட்டில் உள்ள காலடி பிளாண்டேசன் தோட்டத்தில், தும்பிக்கை இழந்த குட்டி யானைக்கு தாய் யானை பாசத்துடன் உணவு வழங்கியது. தாயின் பாசத்தை சுற்றுலாபயணியரும், உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், தும்பிக்கை இல்லாத குட்டி யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. குட்டி ஆண் யானைக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை தாய் யானை வழங்கி வருகிறது. தாய் யானை உணவை சேகரித்து கொடுத்த பின் குட்டி யானை அதுவாகவே உணவை உட்கொண்டும் வருகிறது. யானைகள் கூட்டத்தின் மத்தியில், அதை பாசத்துடன் யானைகள் பராமரித்து வருவது ஆச்சரியமாக உள்ளது. தும்பிக்கை இல்லாத குட்டி யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை