உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் ஷெரிங்

டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் ஷெரிங்

திம்பு : நம் நாட்டில் வட்டச் செயலாளர்களான 'வண்டுமுருகன்'கள் கூட, பொது இடங்களில் அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பூடான் பிரதமர் தான் படித்த கல்வி பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என, வாரத்தில் ஒருநாள் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார்.பூடான் நாட்டின் பிரதமர் லோட்டே ஷெரிங், 41; 2018 நவ. 7, ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அறுவை சிகிச்சை மருத்துவர். ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மருத்துவ பயிற்சி பெற்றவர். தான் கற்ற மருத்துவ கல்வி மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக, சனிக்கிழமை தோறும் அரசு மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றுகிறார். கடந்த வாரம், 'ஜிக்ம் டோரிஜி வாங்ட்ச்' அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த நபர் தற்போது நலமுடன் இருக்கிறார்.இதுகுறித்து லோட்டே கூறுகையில், ''மருத்துவமனையில் டாக்டராக நோயாளிகளின் ஆரோக்கியத்தை கவனிக்கிறேன். பிரதமராக ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறேன். உயிர் உள்ள வரை இப்பணியை மகிழ்வுடன் தொடர்வேன். இதை கடமைக்காக செய்யவில்லை; மன நிம்மதிக்காக செய்து வருகிறேன்,'' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை