உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் அருகே, வடமலாப்பூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், 15 பேர் காயம் அடைந்தனர்.வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட தன் காளையை அடக்கினால், அந்த வீரருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பதாக, தி.மு.க. மாவட்ட செயலர் செல்லபாண்டியன் அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த மோகன், 26, அந்த காளையை அடக்கி, 1 லட்சம் ரூபாய் பரிசை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை