வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யதார்த்த வாழ்க்கை என்பது இப்படி தான் இருக்கும்
சா ப்பாட்டுல இருக்குற சுவை போல, வாழ்க்கையிலும் பல இருக்கு. அத அப்பப்போ அனுபவிச்சுக்கணும் என்கிறார், தள்ளுவண்டி காய்கறி வியாபாரி பாஸ்கர். எத்தன வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டு இருக்கீங்க?
சொந்த ஊரு நெல்லை. கோயம்புத்துாருக்கு வந்து செட்டில் ஆயிட்டோம். 20 வருஷமா தள்ளுவண்டியில காய்கறி வியாபாரம் செஞ்சுட்டு இருக்கேன். காலையில 4:30க்கு முழிச்சிருவேன். அப்போல இருந்து வேலை ஆரம்பிச்சிரும். மார்க்கெட்டுல காய்கறி வாங்கிட்டு, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் இப்படி பல வீதிகளுக்கு போய் வியாபாரம் பண்ணுவேன். வாழ்க்கை நடத்த இந்த தொழிலே போதுமா?இதுவே எனக்கு திருப்தியா இருக்கு. ஒவ்வொரு இடமா போய் பொதுமக்கள சந்திக்கறதும், நடக்கறதும் உடம்புக்கும், மனசுக்கும் தெம்பா இருக்கு. இந்த வியாபாரத்த வெச்சித்தான் குடும்பம் நடத்துறேன். நா படிக்கலேன்னாலும், பொண்ணு, பையன படிக்க வெச்சிட்டேன். பையன் மிட்டாய் கம்பெனி வெச்சிருக்கான். பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சு. இதுலே இருந்து வந்த சம்பாத்தியம் தா எல்லாம். நிம்மதியான வாழ்க்கையில நாம எப்படி இருக்கணும்...?
உபதேசம் பண்ற அளவுக்கு நா பெரிய ஆள் இல்ல தம்பி. நா எப்படி இருக்கேன்னு சொல்றேன். இருக்குற வரை நாலு பேருக்கு நல்லது பண்ணணும். போதும்ங்கற மனசு இருக்கணும். நோய் நொடி இல்லாம பாத்துகிட்டா அதுவே பெரிய சொத்து தான். பிடிச்சத செய்யணும். யாருக்கும் துரோகம் நெனக்காம இருந்தாலே மனசு நெறஞ்சிரும். இந்த வாழ்க்க வாழ்றதுக்கு தானே. உங்க வாழ்க்க நீங்க வாழ்றீங்க. என் வாழ்க்கைய நா வாழ்றேன். இதுல போட்டி பொறாம எங்க வருது. எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.
யதார்த்த வாழ்க்கை என்பது இப்படி தான் இருக்கும்