உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நவீன தொழில்நுட்பத்தில் ரோபோ டீச்சர்

நவீன தொழில்நுட்பத்தில் ரோபோ டீச்சர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் உள்ள தனியார் பள்ளியில், 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோ எனும் இயந்திர ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.மெய்யம்புளியில் உள்ள கிறிஸ்ட் த கிங் பள்ளியில், பெண் போல உருவாக்கப்பட்டுள்ள ரோபோ ஆசிரியரின் செயல்பாட்டை, ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., கோவிந்தராஜுலு துவக்கி வைத்தார். மாணவர்களின் கேள்விக்கு ரோபோ டீச்சர் மிகத் தெளிவாக பதிலளித்தது. விழாவில் ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், நகராட்சி தலைவர் நாசர்கான், பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஷாலினி கூறியதாவது: இந்த ரோபோ 27 இந்திய மொழி, 23 உலக மொழியில் பேசும் திறன் பெற்றது. அறிவியலின் பரிணாம வளர்ச்சி குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதை அறிமுகப்படுத்தி உள்ளோம். வகுப்பறையில் இந்த ரோபோ பாடம் நடத்தாது; ஆனால் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ