உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கடன் தொல்லை தாங்காமல் ரூ.5 லட்சத்துக்கு கிட்னி விற்றேன்: விசைத்தறி தொழிலாளியின் ஆடியோவால் அதிர்ச்சி

கடன் தொல்லை தாங்காமல் ரூ.5 லட்சத்துக்கு கிட்னி விற்றேன்: விசைத்தறி தொழிலாளியின் ஆடியோவால் அதிர்ச்சி

பள்ளிப்பாளையம்: 'கடன் தொல்லையால், 5 லட்சம் ரூபாய்க்கு கிட்னியை விற்பனை செய்தேன்' என, பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளி பேசிய ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஆனந்தன், 45, அப்பகுதியை சேர்ந்த கவுசல்யா, விஜயா என, இரண்டு பெண் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் ஒரு கிட்னியை விற்பனை செய்ய வைத்துள்ளார். இதேபோல் பல பெண்களிடம் பேசி, கிட்னி விற்பனை செய்ய வைத்துள்ளார். தலைமறைவான ஆனந்தனை இரண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

வழக்கு போடுவேன்

இந்நிலையில், பள்ளிப் பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர், மொபைல் போனில் பேசிய ஆடியோவில் அவர் பேசியதாவது:எனக்கு கடன் பிரச்னை இருந்தது. இதனால் கிட்னியை விற்க முடிவு செய்து புரோக்கரிடம் தெரிவித்தேன். அவர்கள், பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்துக் கொண்டனர். இது நடந்து ஐந்து மாதமாகிவிட்டது. கடினமான வேலை செய்ய முடியவில்லை. கிட்னி விற்பனைக்கு, 5 லட்சம் ரூபாய் கொடுத்தனர். மருத்துவ சிகிச்சை முழுதும் அவர்களே பார்த்துக் கொண்டனர். பரிசோதனைக்கு சென்றபோது, போலீஸ் அதிகாரிகள் என்னை விசாரித்தனர். அவர்களிடம், 'உறவினருக்கு கிட்னி கொடுக்கிறேன்' என, தெரிவித்தேன். அவர்கள், 'பணத்துக்காக கிட்னி விற்பனை செய்யக்கூடாது; அப்படி செய்தால் வழக்குபோட்டு உள்ளே வைத்து விடுவேன். பிரச்னை இருந்தால் சொல்லுங்கள்' என்றனர். மேலும், அந்த மருத்துவமனையின் டாக்டர், 'காசுக்காக கிட்னியை விற்பனை செய்யக்கூடாது; அப்படி இருந்தால் நான் ஆப்பரேஷன் செய்ய மாட்டேன்' என, தெரிவித்தார்.

கடன் வாங்காதீங்க

தற்போது, கடன் எல்லாம் கட்டிவிட்டேன். பள்ளிப்பாளையத்தில் கடன் தொல்லையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எக்காரணம் கொண்டும் பள்ளிப்பாளையத்தில் கடன் வாங்க கூடாது. இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது. இதற்கிடையே, கிட்னி புரோக்கர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, பா.ம.க.,வினர் பள்ளிப்பாளையம் போலீசில் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட செயலர் உமாசங்கர் கூறுகையில், ''தலைமறைவாக உள்ள கிட்னி புரோக்கர் ஆனந்தனை, போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ''அவரை கைது செய்து, உடந்தையாக இருந்த மேலும் சில புரோக்கர்களையும் கைது செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
ஜூலை 22, 2025 08:29

"பணத்துக்காக கிட்னி விற்பனை செய்யக்கூடாது" இது குற்றமானால் பல காக்கிச்சட்டை காவலர்களும் பணத்துக்காக கடற்கரை போன்ற இடங்களில் பொது மக்களிடம் தன மானத்தை விற்று பணம்/பொருள் புடுங்குகின்றனரே இது குற்றமென்று அவர்களுக்கு தெரியாதா. பணத்துக்காக கருவை கூட விற்கும்/ வாங்கும் நடிகைகள் உள்ளனரே


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 10:27

TANTRANS வலைத்தளத்தில் பதிவு செய்த சீனியாரிட்டிபடி மட்டுமே உறுப்புதானம் அனுமதி உண்டு. சம்பந்தப்பட்ட தரகர் திமுக முக்கியஸ்தர் என்கிறார்கள். தேறாது


அருண், சென்னை
ஜூலை 21, 2025 08:43

இது எப்புடி... நாங்க இப்போ எப்படி சொல்லவைத்தோம் பார்த்தீங்களா? இதுவரை தனி படை அமைத்து அந்த திமுக ஆளை பிடிக்கவில்லை, FIR இல்லை, அதற்குள் victimஐ எப்படி சொல்லவைத்தோம்.... விஞ்ஞான ஊழல் சாம்ராஜ்யம் ஆச்சே... எப்புடி... ஏழை ஏழையாவே இருக்கணும்...யாருக்குத்தான் கடன் இல்லை?... கிட்னி வித்ததா காசு கிடைக்கும்னு எப்படி இந்த கிராமவாசிகளுக்கு தெரியும்?


அப்பாவி
ஜூலை 21, 2025 08:27

உரக்ஜச் சொல்லாதீங்க. ஜி.எஸ்.டி கட்டுனியா, இன்கம்டாக்ஸ் கட்டுனியா, அமலாக்கத்துறை வருமானத்துக்கு அதிக சொத்து சேத்தியான்னு ரெய்டுக்கு வந்துரப் போறாங்க.


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2025 08:41

மிகமிக கேவலமான ஜென்மம் நீங்க கோபாலபுர கொத்தடிமையாரே நீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை