மேலும் செய்திகள்
ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
25-Dec-2025 | 3
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
24-Dec-2025 | 1
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
22-Dec-2025 | 2
ராமநாதபுரம் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராணுவ வீரர் பீரங்கி பயிற்சி மைதானத்திற்கு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த வீர் சக்ரா விருது பெற்ற ராமநாதபுரம் ராணுவ வீரர் ஹவில்தார் கே.பழனியின் பெயர் சூட்டப்பட்டு அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.திருவாடானை அருகே கடுக்களுர் கிராமத்தைச்சேர்ந்தவர் பழனி 40. ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றிய நிலையில் 2020 ஜூன் 15ல் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார்.தீரத்துடன் போரிட்ட இவரின் வீரதீரச் செயலை கவுரவிக்கும் விதமாக 2021ல் ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதுவழங்கப்பட்டது.டில்லியில் இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவு ஸ்துாபியிலும் பழனியின் பெயர் பொறிக்கப்பட்டது. அதே ஆண்டில் பிப்.8ல் அவர் பணி புரிந்த அலகாபாத் ராணுவ மையத்தில் அவரது பெயரில் நினைவு அரங்கம், மார்பளவுவெண்கலச் சிலை திறக்கப்பட்டது. பீரங்கி இயக்குவதில் திறமை மிக்க அவர் பீரங்கி பயிற்சி பெற்ற ஐதாரபாத்தில் உள்ள மைதானத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு அவரது மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் மையத்தின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் அதோஸ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்,பழனியின் மனைவி வானதி தேவி, மகன் பிரசன்னா, மகள் திவ்யா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.வானதி தேவி கூறுகையில் ''எனது கணவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும், பயிற்சி பெறும் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பீரங்கி மைதானத்திற்கு அவரது பெயரும் சிலையும் வைத்துள்ளனர். வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். ராணுவ அதிகாரிகள், மத்திய,மாநில அரசுகளுக்கு நன்றி என்றார்.
25-Dec-2025 | 3
24-Dec-2025 | 1
22-Dec-2025 | 2