உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி

கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: சுவாமிமலையில், கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி செலுத்திய தி.மு.க.,வினர் மீது, பா.ஜ.,வினர் புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, கோவில் முகப்பில் உள்ள கேட்டில், கருணாநிதி போட்டோவை வைத்து, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். தகவலறிந்த பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவில் துணை ஆணையர் உமாதேவிக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கருத்துக்கள் பரவின. இதையறிந்த தி.மு.க.,வினர், சில மணி நேரத்தில், கோவில் பணியாளர்கள் முன்னிலையில், கருணாநிதி போட்டோவை அகற்றினர். இது தொடர்பாக, பா.ஜ.,வினர் சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Thirumal Kumaresan
ஆக 08, 2025 16:42

பைத்தியக்காரர்கள்,


sankaranarayanan
ஆக 08, 2025 13:01

கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி இது போதாதென்று கோயில் உள்ளேயும் அஞ்சலி செய்ய சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமே இல்லை இது அவர்களது திராவிட மாடல் அரசு நீதி மன்றங்களும் அவர்களுக்கு துணை போகின்றன துணை நிற்கின்றன.


xyzabc
ஆக 08, 2025 12:39

மாடல் ஆட்சி 2.0 ல இது எல்லாம் சகஜம் ஆகி விடும்.


PR Makudeswaran
ஆக 08, 2025 10:56

மு க வின் போட்டோவை வைத்த அந்த அறிவுக்களஞ்சியம் தயிர் வடையை வைக்க மறந்தது ஏனோ


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 08, 2025 09:45

கருத்துக்களையே காணோம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 08, 2025 09:10

கிறித்தவர்களின் பிரார்த்தனையாலும் அவர்களின் வாக்குகளாலும்தான் 2021 தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று சொன்னவர்கள் ஒரு கிறித்தவ வழிபாட்டு தலத்தில் வைத்து கலைஞருக்கு பூசை செய்து அஞ்சலி செலுத்தவில்லையே?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 08, 2025 09:07

அடுத்த ஐம்பதாண்டுகளில் இன்றைய தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடைவீடு ,தமிழ்க்கடவுள் கலைஞரின் அறுபடை வீடாகக்கூடும்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஆக 08, 2025 09:04

திராவிட பகுத்தறிவு சந்தி சிரிக்குது.


suresh Sridharan
ஆக 08, 2025 08:49

.... வைக்க வேண்டிய போட்டோ அது


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 08, 2025 08:25

சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ள, பா.ஜ.,வினர் மீது மேல் நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு தற்காலிக சிறையில் வைத்துள்ளனர்


முக்கிய வீடியோ