வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ் எண்ணம் படேலுக்கு எந்த மரியாதை /விளம்பரம் கூடாது என்பதே .நாய் வைக்கோல் போரை காத்தது போல தானும் செய்யாது மற்றவர்களையும் பழிக்கும் கேவலமானது.ஆனால் நேரு குடுமத்திற்கு எதுவும் செய்யும
எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபபாய் படேலின் சிறந்த வரலாற்றை, தங்களுடையதாக காட்ட, பா.ஜ., முயற்சி செய்வதாக, காங்கிரஸ்விமர்சனம் வைத்துள்ளது.'நாட்டின் சுதந்திரத்துக்காகவும்,சுதந்திரத்துக்குப் பின் நாட்டை ஒன்றுபடுத்துவதிலும் சர்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பு காலத்துக்கும் பாராட்டக் கூடியது.அவர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், முழுநேர காங்கிரஸ்காரரான அவருக்கு, தற்போது ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் விழா எடுக்கின்றனர். வல்லபபாய் படேலின் பெருமைகளை அபகரிக்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், ஒரு அறிக்கை வெளியிட்டு அங்கலாய்த்துள்ளார்.குதிரை களவு போன பிறகு லாயத்தை பூட்டுவது போல, தாங்கள் செய்ய வேண்டியகாலத்தில், அமைதியாக மவுனசாமிகளாக இருந்து விட்டு, பா.ஜ., அந்தக் காரியத்தை செய்து முடிக்கும் போது, 'குய்யோ முய்யோ' என்றும், 'லபோதிபோ' என்றும்கதறுவதே காங்கிரசின் வாடிக்கையாகி விட்டது.முழுநேர ஆட்சியாளர்களாக, தொடர்ந்து,60 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் கோலோச்சிக் கொண்டிருந்தீர்களே... அப்போது அந்த முழுநேர காங்கிரஸ்காரரான படேலை குறித்து, ஒரு நிமிடம்,ஒரே ஒரு நிமிடமாவது சிந்தித்து பார்த்திருப்பீர்களா?உங்களுக்கு சிந்திக்க எங்கே நேரம் இருந்திருக்கிறது... நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில், ஒட்டுமொத்த மக்களையும் கடனாளியாக்கத் தானே நேரம் சரியாக இருந்தது!இன்றைக்கு பிரதமர் மோடி முயற்சி எடுத்து, படேலுக்கு சிலை வைக்க தோன்றியதை போல, நீங்கள் ஆட்சியில் இருந்தபோதே ஏன் சிந்திக்க தோன்றவில்லை?காங்கிரசே அந்த சிலையை நிறுவி இருந்தால், பிரதமர் மோடிக்கு அந்த பேரும், புகழும் கிடைத்திருக்காதே... அது காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்திருக்குமே! மனசாட்சியோடு மோடியை பாராட்டுங்கள்! முடிந்த வரை சுருட்டும் தலைவர்கள்!
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்'
கடிதம்: 'பழைய தலைவர் போல நான் இருக்க மாட்டேன்; நம் பஞ்சாயத்தை
சிறப்பானமுறையில் நிர்வகித்து, மக்களுக்கு தேவையானதைசெய்வேன். லஞ்சம்,
ஊழல்இருக்காது; எல்லாம்வெளிப்படையாக நடக்கும்'என வாக்குறுதி கொடுத்துதான்,
ஒவ்வொரு முறையும்உள்ளாட்சி நிர்வாகத்தில்பலரும் பதவிக்கு வருகின்றனர்.ஆனால்,
வார்டு கவுன்சிலர்கள், தலைவர்கள் மாறினாலும், அவலங்கள் மாறாமல் அப்படியே
தான்இருக்கின்றன. குடிநீர், கழிப்பறை, குப்பை, சாக்கடை, ஆக்கிரமிப்பு,
தெருநாய் தொல்லையுடன் பொது மக்கள் இன்றும் போராடிக் கொண்டு தான்
இருக்கின்றனர்.அரசுக்கு பல லட்சம் ரூபாய் நிதி இழப்பை
ஏற்படுத்தியதாக, தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சி தலைவரை பதவிநீக்கம்
செய்து, கலெக்டர்உத்தரவிட்டுள்ளார்; ஊராட்சி செயலர், லஞ்ச ஒழிப்பு
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது,சமீபத்திய உதாரணம்.ஊரக
உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம்முடிவதற்கு இன்னமும் சில மாதங்கள் தான்
இருக்கின்றன. பலரும் கடைசி கட்ட வசூலில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.'உள்ளாட்சி
பதவியில்இருக்கும் பெண்களுக்குஉதவியாக செயல்படுகிறேன்'என்ற நோக்கில்
அவர்களதுகணவர், மகன் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தலையீடு அதிக அளவில்
இருப்பதும்பரவலாக நடக்கிறது. பெண்தலைவர்களின் கையெழுத்தைகுடும்ப
உறுப்பினர், கணவர்ஆகியோரே பச்சை மையில்போடும் அவலங்களும்பல இடங்களில்
நடக்கின்றன.'அடுத்தமுறை தேர்தலில்நின்றால், தனக்கு ஓட்டு
போடமாட்டார்கள்' என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு, இருக்கும் காலத்தில்
முடிந்தவரை சேர்க்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும்இருப்பது தெரிகிறது.எனவே,
அடுத்து வரும்தேர்தலிலாவது, 'இது நம் ஊர், நம் பஞ்சாயத்து, நம் வார்டு'
என்ற அக்கறையுடன்செயல்படக் கூடியவர்கள் தேர்தலில் நிற்க
வேண்டும்.அவர்களுக்கு ஓட்டளித்து மக்களும் தேர்வுசெய்ய வேண்டும். கடவுளை வேண்டுவது கிண்டலுக்குரியதா?
ஏ.வி.ராமநாதன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2019 நவம்பரில், அயோத்தி கோவில்- - பாபர் மசூதி வழக்கில், 'கடவுளிடம்நம்பிக்கையோடு பிரச்னைக்குதீர்வு கிடைக்க வேண்டிய போது, கடவுள் எனக்கு வழிகாட்டினார்' என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்,தன் இறை நம்பிக்கையைப்பற்றி சொல்லியிருந்தார்.'அப்படியானால், அது சட்டத்தின் தீர்ப்பல்ல, அருள்வாக்கு தான்! இதற்குநீதிமன்றம் எதற்கு?' என, பகுத்தறிவு பகலவனான, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்மதுரை எம்.பி.,வெங்கடேசன் கிண்டல் செய்திருக்கிறார்! நீதித் துறையை மட்டுமல்ல; 500 ஆண்டுகளாக,வரலாற்று அடிப்படையிலும்,தார்மிக அடிப்படையிலும்,சட்ட அடிப்படையிலும்ஹிந்துக்கள் போராடிக் கிடைத்த அயோத்தி தீர்ப்பால், ராமபிரானுக்கு ஆலயம் எழுப்பப்பட்டதையும், வெங்கடேசன்ஏளனம் செய்திருக்கிறார்!இவருக்கு இறைநம்பிக்கை இல்லைஎன்றால், தியானம், பிரார்த்தனை போன்றவற்றில்ஈடுபட வேண்டாம். அதற்காக பிறரின் இறை நம்பிக்கையை கிண்டல் செய்ய இவருக்கு உரிமையையும், தகுதியையும் யார் கொடுத்தது? லட்சக்கணக்கான சட்டமேதைகள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுனர்கள், வியாபாரிகள் மற்றும்மருத்துவர்கள், தங்கள் அன்றாட தினத்தைமற்றும் தொழிலைத் துவங்கும்போது, தங்கள் இஷ்ட தெய்வத்தை தியானித்து துவங்குவது, பாரத மண்ணில் தொன்றுதொட்டு ஊறிய நல்ல பழக்கம். அப்படி தியானிப்பதால், அவர்கள் சட்டம், அறிவியல், பொறியியல், வியாபாரம் மற்றும் மருத்துவத்திற்கு சம்பந்தம் இல்லாதவற்றில் ஈடுபடுகின்றனர் என்று ஆகிவிடுமா? 'அருள்வாக்கு' என்றால், அவ்வளவு இளப்பமா? கம்யூனிச சித்தாந்தத்தின் பிறப்பிடமான சீனா மற்றும் ரஷ்யாவிலேயே கம்யூனிசம் காணாமல்போய்விட்ட பின்,இந்தியாவில் ஒடுங்கிய நிலையில் இருக்கும் கட்சியை சேர்ந்த இவர்களைப் போன்றோர்,போலி பகுத்தறிவு வாதம் பேசப் பேச, இவர்களது அறியாமையும், பலவீனமும் தான் மேலும் மேலும் வெளிப்படுகின்றன. தமிழரின் பெருமைமிகு நுாலாம் திருக்குறளின் மேன்மையை அறிந்த வெங்கடேசன், குறள் 2ன்படி, 'இறைவனடி தொழாதவர் எவ்வளவு கல்வியறிவு பெற்றவர் ஆயினும், பயன் ஏதும் இல்லை' என்பதையும்,குறள் 9ன்படி,'இறைவனடி வணங்காதோரின் தலைகள் பயனற்ற ஐம்புலன்களைப்போல பயனற்றவை ஆகிவிடும்' என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்!
காங்கிரஸ் எண்ணம் படேலுக்கு எந்த மரியாதை /விளம்பரம் கூடாது என்பதே .நாய் வைக்கோல் போரை காத்தது போல தானும் செய்யாது மற்றவர்களையும் பழிக்கும் கேவலமானது.ஆனால் நேரு குடுமத்திற்கு எதுவும் செய்யும