ஆர்.ரமேஷ், கோவையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக கூறும் காங்கிரஸ், அதை நிரூபிக்கவேண்டும்' என திரிணமுல் காங்., கட்சி பொதுச்செயலரும், மம்தாவின் உறவினருமான,அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.'லோக்சபா தேர்தலில் காங்., கட்சிக்கு, 100 எம்.பி.,க்கள் கிடைத்தபோது, அதை பெரிய வெற்றி என்று கூறினீர்கள். அதே நேரத்தில், தேர்தலில் தோல்வி அடைந்த உடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தைகுற்றம் சொல்கிறீர்கள். உங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள். மின்னணு ஓட்டுப்பதிவை ஏற்காவிட்டால், தேர்தலில் போட்டியிடாதீர்கள்' என, தன் பங்குக்கு சாடியுள்ளார், ஜம்மு - -காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே, 'ஜம்மு - -காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் காங்., இடம் பெற்றுள்ள, 'இண்டியா' கூட்டணி வென்றது. அப்போது எல்லாம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், ஹரியானா, மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்ததும் கேள்வி எழுப்புகின்றனர். பொய்களால் மட்டுமே ஒரு கூட்டணி நிலைத்திருக்க முடியாது. தாமதமாக இருந்தாலும், அபிஷேக் பானர்ஜி உண்மையை புரிந்து கொண்டுஉள்ளார்' என்று கூறியுள்ளார்.சட்டசபை தேர்தலோ, பார்லிமென்ட் தேர்தலோ, காங்., கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணி வெற்றி பெற்றால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சிலாகிப்பதும்,தோல்வியுற்றால் சந்தேகிப்பதும் காங்கிரசின்வழக்கமாக உள்ளது. அதனால், இனி வரும் காலங்களில், மருத்துவமனைகளில், நோயாளிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, நோயாளியின் நெருங்கிய உறவினரிடம்இருந்து, 'டிக்ளரேஷன்' வாங்கி வைத்துக் கொள்வது போல், தேர்தல் கமிஷனும், 'தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். பிரச்னை செய்ய மாட்டோம்' என்று காங்., கட்சியிடம் ஒப்புதல் வாங்கிக் கொள்வது சாலச் சிறந்தது! போதும் முதலை கண்ணீர்!
கே.என்.ஸ்ரீதரன்,
சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆடு
நனையுதே என்று ஓநாய் அழுததாம்' என்பதைப் போல் இருக்கிறது, கடவுள்
மறுப்பாளர்களின் பேச்சுகள். இளையராஜா பிராமணர்அல்லாதவர் என்பதால்
தான், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் செல்ல, அவருக்கு
அனுமதி மறுக்கப்பட்டதாம்... ஊடகங்கள் முன் அமர்ந்து,சில பகுத்தறிவு
பகலவர்கள்ஊளை இட்டுக் கொண்டுஇருக்கின்றனர். என்னமோ எல்லா
பிராமணர்களும் கருவறைக்குள் சென்று, கும்மி அடிப்பது போன்றும், மற்றவர்கள்
கருவறைக்குள்செல்ல முடியவில்லை என்பது போலவும் பேசுகின்றனர். கோவிலின்
ஆகமவிதிகளுக்கு உட்பட்டு, அக்கோவில் அர்ச்சகர்,மடாதிபதிகளை தவிர,
எந்தபிராமணரும் உள்ளே போகமுடியாது; அவர்களும் மற்றவர்களைப் போல், வரிசையில்
காத்திருந்து வெளியில் இருந்து தான் தரிசிக்க முடியும்! ஏன் சில கோவில்களில்,மடாதிபதிகளே கருவறைக்குள் போக முடியாது என்பதாவது இவர்களுக்குதெரியுமா? கடவுளை நம்புவோர், ஆகம விதிகளை ஏற்றுக் கொண்டு, அதை பின்பற்றுகின்றனர். அது அவர்களது மத நம்பிக்கை!இதில், கடவுளே இல்லைஎன்பவர்களுக்கு, கருத்து சொல்ல என்ன உரிமை இருக்கிறது? ஒருவரின் மத நம்பிக்கையை விமர்சனம் செய்ய இவர்கள் யார்?இதில்,
மாற்று மதத்தை சேர்ந்த சிலர், ஏதோ நியாயத்தை பேசுவது போலசனாதன
தர்மத்தையும், பிராமணர்களையும் சாடுவது போல், ஹிந்து மதத்தை துாஷிக்க
வந்து விடுகின்றனர்.தன் வீட்டு கூரையில், ஆயிரம் பொத்தல்களை
வைத்துக் கொண்டு, 'அடுத்த வீடு ஒழுகுது' என்றானாம் ஒருத்தன். முதலில்
நீங்கள் சார்ந்த மதத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்; பின்,மாற்று மதத்தை
பற்றி கருத்து சொல்ல வாருங்கள்!'என்னை மையமாக வைத்து, பொய்யான
வதந்திகளை பரப்பி வருகின்றனர். நான் எந்த இடத்திலும், என் சுயமரியாதையை
விட்டு கொடுத்ததில்லை' என்று வேதனையுடன் கூறிஉள்ளார், இளையராஜா. இதுதான், அந்த இசைமேதைக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதையா?ஹைதராபாதைச்
சேர்ந்த திரிதண்டி ஜீயர், ஜாதி வித்தியாசம் இல்லாமல், அனைத்து
சமுதாயத்தினரையும் தன் சீடர்களாக ஏற்றுக் கொண்டுள்ளவர் என்பதுஇங்குள்ள
எத்தனை பேருக்கு தெரியும்?சனாதன தர்மத்தை, ஹிந்து மதத்தை
பிராமணர்களோடு மட்டும்தொடர்புபடுத்தி, ஹிந்து மதத்தை பிளவுபடுத்தும்
பிரிவினைவாத அரசியல் செய்யும் இந்த கூட்டம், தன் தெய்வீக இசையால், கோடிக்
கணக்கான மனங்களை வருடிக் கொண்டிருக்கும்இளையராஜாவிற்கு அப்படி என்ன உயர்ந்த
அங்கீகாரத்தை கொடுத்து விட்டது?பொய்யை பரப்பி, அதில்சுகம் காணும் இவர்கள், இளையராஜாவிற்காக வருத்தப்படுவது போல் நடித்து, முதலைக் கண்ணீர்வடிக்க வேண்டாம்!வேஷதாரிகளே... உங்கள் நடிப்பை நம்புவதற்கு இது, 1960 கால கட்டம் அல்ல; 2024! விட்டத்தில் பாய துடிக்கும் கூட்டணி!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இண்டியா'
கூட்டணியின் தலைவராககாங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும்,
மக்கள் என்னவோ ராகுலை தான் இண்டியா கூட்டணி தலைவராக பார்க்கின்றனர். நிழல் தலைவர் ராகுலின்தலைமையிலான இண்டியாகூட்டணி, மஹாராஷ்டிரா,ஹரியானா சட்டசபை தேர்தல்களில் எதிர்பார்த்தவெற்றியை பெறவில்லை. இதனால்,
கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுலுக்குஎதிராக, மெல்ல முணுமுணுக்க ஆரம்பித்து
விட்டனர். 'காங்., ஆத்ம சோதனை செய்து கொள்ளவேண்டும்' என, இந்தியகம்யூ.,
அறிவுரை கூறுகிறது. 'வாய்ப்பு கொடுத்தோம்; ராகுலுக்கு அரசியல்
முதிர்ச்சி இல்லை' என்று கூறிய சமாஜ்வாதி தலைவர்அகிலேஷ் யாதவ்,
'கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை ஏற்க வேண்டும்' என்கிறார். அதைத்
தொடர்ந்து, 'பா.ஜ.,வுக்கு மம்தாவால் தான் சரியான பதிலடி தர முடியும்'
என்று கூறி, சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்.,சரத் பவார்,
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பின் பாட்டு
பாடுகின்றனர்.இதற்கிடையே, 'எனக்கு கல்யாண ஆசை இல்லை;
ஆனால்,அம்மாவுக்கு உதவி செய்ய ஒரு பெண்வேண்டும்' என்று மகன் சொல்வது
போல,'கூட்டணிக்கு தலைமை தாங்க தயார்' என, தன் ஆசையை வெளிப்படுத்திஉள்ளார்,
மம்தா பானர்ஜி. மாநில கட்சிகள் மலர்கள்போல... அவற்றை, மாலையாக தொடுக்கும் நார், காங்., தான். இதை புரிந்துகொள்ளாமல், இண்டியா கூட்டணி கட்சியினர் பாய முண்டுவது,'குருட்டு பூனை விட்டத்தில்பாய்ந்த' கதையாக ஆகி விடும்!