உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மத்திய அரசுக்கு கடன் வழங்கும் தமிழகம்!

மத்திய அரசுக்கு கடன் வழங்கும் தமிழகம்!

ஆர்.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் சிவாஜிகணேசன் நடித்து, 1970ல் வெளிவந்த படம், விளையாட்டு பிள்ளை! இப்படத்தில், 'ஏரு பெருசா, இந்த ஊரு பெருசா... சொல்லடி நெல்லு பெருசா, பயக சொல்லு பெருசா...' என்று ஒரு பாட்டு வரும். அதுபோல், பிரதமர் மோடி, நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று, 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக முதல்வரோ 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளாராம்! இந்த, 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க பிரதமர் ஜப்பானுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை தொலைபேசி வாயிலாகவே பேசி முடித்து, வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். டாக்குமெண்டுகளில் தொலைபேசி வாயிலாக கையெழுத்திட இயலாது என் பதால், தற்போது தன் துணைவியாரையும், சில உடன்பிறப்புக்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இப்படி தொலைபேசி வாயிலாகவே முதலீடுகளை ஈர்க்கும் சாமர்த்தியம், இந்தியாவில், தமிழக முதல்வரைத் தவிர வேறு எவருக்கு இருக்கிறது? இனி, மத்திய அரசுக்கு நிதியுதவி தேவையென்றால், அதை தமிழக அரசே கடனாக வழங்கும். அதேபோன்று, எந்த நிதியுதவிக்கும், தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பார்க்காது. இப்படி பொருளாதாரத்தில் மட்டுமின்றி தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயம், ஏற்றுமதி - இறக்குமதி, கல்வி வளர்ச்சி போன்ற அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, உலக நாடுகளுக்கே தமிழகம் அல்லவா வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது! இனி, தமிழகம் வாங்கியுள்ள, 9 லட்சம் கோடி ரூபாய் கடனையும் எளிதாக அடைத்து, உபரி பட்ஜெட் போடும் பாருங்கள்! முதல்வர் ஸ்டாலினா, கொக்கா?  சபை நாகரிகம் தெரியாத உடன்பிறப்புகள்! சு.மணிபிரபு, கம்பம், தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், தி.மு.க., நிர்வாகியின் மனைவியான பல்கலை மாணவி ஒருவர், கவர்னரிடம் பட்டம் வாங்க மறுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதைத் தொடந்து சமீபத்தில், துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, போட்டியில் வென்ற தொழில்துறை அமைச்சர் ராஜாவின் மகனுக்கு கழுத்தில் பதக்கம் அணிய முயன்றபோது, அதை மறுத்து கையில் வாங்கி யுள்ளார் அமைச்சரின் மகன். இதுதான், 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' கட்சியின் உயரிய பண்பாடு! அரசியல் களத்தில் என்னதான் முட்டி மோதிக் கொண்டாலும், பார்லிமென்ட்டில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்துக் கொள்வர். அது தான் நாகரிக சமூகத்தின் அடையாளம். தமிழகத்திலும் கூட, எதிர்க்கட்சி தலைவரை முதல்வர் சந்திக்கும்போது, 'வணக்கம்' தெரிவிப்பது வழக்கம். இவ்வளவு ஏன் முதல்வரும், கவர்னரும் கருத்து முரண்பாடால் முட்டிக் கொண்டாலும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி சிரித்து பேசுவது வழக்கம். காரணம், அரசியல் வேறு; மனித பண்புகள் வேறு! முதல்வரே அரசியல் நிலைபாட்டை தாண்டி, சபை மாண்பை கடைப்பிடிக்கும்போது, அவரது அடிபொடிகள் மாண் பிழந்து போவது ஏன்? கவர்னரிடம் பட்டம் வாங்க மறுத்தார், தி.மு.க., நிர்வாகியின் மனைவி. சரி... அந்த பட்டத்தில் கவர்னர் கையெழுத்து இருக்குமே... அதை என்ன செய்யப் போகிறார்? 'கவர்னர் ரவி கையெழுத்து உள்ள பட்டம் எனக்கு வேண்டாம்' என்று கூறி, கிழித்து எறிந்து விடப் போகிறாரா என்ன? எதற்கு இத்தகைய இழிவான நாடகம்? மீடியா வெளிச்சத்திற்காகவா இல்லை தலைமையின் மனதை குளிர வைக்கவா? அமைச்சரின் மகன் அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்தார். ஆனால், 'எங்கிருந்தாலும் அவர் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்யவேண்டும். பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்' என்று அமைச்சர் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தார் அண்ணாமலை. இதுதான் கற்றவர்களின் பண்பு!  ஓட்டு அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியுமா? பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றக்கோரி, வி.சி., தலைவர் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட்டாக சென்று, தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர். சட்டத்தால் ஆணவக் கொலைகளை ஒழித்து விட முடியுமா? ஜாதி பாகுபாடுகளும், ஜாதிய மோதல்களும், ஆணவக்கொலைகளும் ஒழிய வேண்டும் என்ற எண்ணம், அரசுக்கு உண்மையாகவே இருந்தால், முதலில், ஜாதி கட்சிகளை கூட்டணியில் சேர்க்கக் கூடாது; ஜாதி வாரியாக தொகுதி ஒதுக்கக் கூடாது. அத்துடன், ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்து, பொருளாதாரத் தில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்க வேண்டும். ஜாதி கட்சிகளும், சங்கங்களும் தான் தேசிய தலைவர்களை எல்லாம், ஜாதி எனும் குடுவைக்குள் அடைத்து வைத்துள்ளன. முன்பை விட இப் போது, ஜாதி பாகுபாடு கள் வெகுவாக குறைந்து உள்ள நிலையில், தங்கள் சுயநலத்திற்காக, ஜாதி எனும் தீயை அணையவிடாமல் பாதுகாப்பது இந்த கட்சிகளும், சங்கங்களும் தான்! 'அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி' என்றும், 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்றெல்லாம் ஜாதி உணர்வுகளை துண்டி விடும் இவர்கள், பிரதான அரசியல் கட்சி களால் ஒதுக் கப்பட்டாலே, இந்த ஜாதி தீ கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் இழந்து விடும். ஆனால், இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கையை இங்கு எவர் எடுப்பர்? ஜாதி பிரிவினையை ஏற்படுத்தி, அதில் சமூக நீதி பேசி, ஓட்டு அரசியல் செய்யும் இவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh
செப் 03, 2025 09:39

அவ்ளோ இலாபத்தில் தமிழ் நாடு அரசு இருக்கிறதென்றால், தமிழ் நட்டு மக்கள் மீது உண்மையாக பாசம் இருந்தால், தமிழ் நாட்ல முழு மதுவிலக்கை அமல்படுத்தட்டும் ....முதல்வர் ...அவர்கள் ..


Anantharaman Srinivasan
செப் 02, 2025 23:56

திருமா.க்கும். ராம்தாஸ் க்கும் ஜாதி தான் தலைவர் என்ற அந்தஸ்தை கொடுத்து பொட்டி கிடைக்க வழி செய்கிறது. இல்லாவிடில் இவர்களை யார் சீண்டுவார்கள்.


D.Ambujavalli
செப் 02, 2025 17:09

சபை நாகரீகத்தையெல்லாம் என்றோ உதிர்த்து எறிந்தவர்கள்தானே இவர்கள் நேற்றுப் பிறந்த குழந்தை உள்ளத்தில் கூட அந்த விஷத்தை ஊட்டியே வளர்க்கப்பத்து வெட்ட வெளிச்சமாகி உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை