எதற்கு சமபந்தி விருந்து?
எஸ்.எஸ்.ராமமூர்த்தி,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'ஒரு காலத்தில், பட்டியல்
இனத்தவர் தீண்டத்தகாத வர் களாக கருதப்பட்டனர். மற்றவர்களுடன் சரிசமமாக
அமர்ந்து உணவருந்தும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது என்பதை
இப்போது உள்ளவர்களுக்கு நினைவூட்டுவதே, இன்றைய சமபந்தி விருந்தின் நோக்கம்'
என்று குற்றஞ்சாட்டியுள்ளார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்
தர்மன். உண்மைதான்... தமிழகத்தில் ஜாதிய தீண்டாமை புரையோடி இருந்த காலத்தில், அந்த எண்ணத்தை மாற்ற கோவில்களில் சமபந்தி விருந்து அளித்தனர். ஆனால், இன்று ஜாதிய பாகுபாடு இருந்தாலும், தீண்டாமை இல்லை. ஆனாலும், இன்றும் சமபந்தி விருந்து வைப்பதற்கு காரணம் என்ன? 'பிற ஜாதியினருடன் சமமாக உட் கார்ந்து உணவருந்தும் தகுதி கூட இல்லாத
வனாகத் தான் நீ இருந்தாய்!' என் பதை சுட்டிக்காட்டவே, இன்றும் சமபந்தி
விருந்து நடத்தப்படுகிறதே தவிர, இதில் வேறு என்ன சமத்துவம் இருக்கிறது? இதையே தான், 'ஹோட்டல்களில் அனைவரும் சரிசமமாக அமர்ந்து, தினமும்
சாப்பிடும் போது, எதற்கு சமபந்தி விருந்து? ஜாதியை ஒழிக்க வில்லை
என்றாலும், தீண்டாமை ஒழிக் கப்பட்டு விட்டது. பொது இடங்களில்
பட்டியலினத்தவர் தனிமைப்படுத்தப் படுவதில்லை. சட்டரீதியான பாதுகாப்பு
அவர்களுக்கு இருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதற்கு இந்த சமபந்தி?'
என்று கேள்வி எழுப்பியுள்ளார், எழுத்தாளர் தர்மன். தாங்கள் ஜாதி
மறுப்பாளர்கள், சமத்துவம் பேணுபவர்கள் என்று காட்டிக் கொள்ள, அண்ணாதுரையின்
நினைவு நாளையொட்டி, தி.மு.க.,வினர் ஆலயங்களில் சமபந்தி விருந்து
வைக்கின்றனர். பொதுவாக, நினைவு நாளான திவ சத்தன்று புரோகிதர்களை வைத்து திதி கொடுத்து, தட்சணையும் அளித்து, உணவளிப்பது ஓர் ஐதீகம். இவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே! அதனால், அதையே மாற்றி, 'சமபந்தி விருந்து' என்று நாமகரணம் சூட்டி, அதை
அறிவாலயத்தில் வழங்காமல், ஆலயங்களில் வழங்கத் துவங்கியுள்ளனர். 'ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே; மறுநாள் பார்க்கையில் மாறி
இருந்தான் ஜாடையிலே' என்ற கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல் உள்ளது,
தி.மு.க.,வினரின் சமபந்தி விருந்து!
வெறுப்பு அரசியலுக்கு விதை ஊன்றியவர் எவர்?
டி .ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து விமர்சனம் செய்தவர், எம்.ஜி.ஆர்., ஒரு பார்ப்பன பெண் திராவிடக் கட்சியின் தலைவராவதற்கு பாதை போட்டுக் கொடுத்தவரும் அவர் தான். கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற தொற்றுநோய் தமிழகம் மு-ழுதும் உள்ளது. அந்த நோய் எனக்கும் இருந்தது' என்று, வரலாறு தெரியாமல் உளறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன். தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு பிள்ளையார் சு ழி போட்டவரே கருணா நிதி தான். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து, அதற்கு உரம் போட்டு ஆ-லமரமாக வளர்த்தவர் கருணாநிதி. கடந்த 1972ல் அ.தி.மு.க., வை எம்.ஜி.ஆர்., துவங்கிய காலம் அது! தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அன்று, சட்டசபையில் எம்.ஜி.ஆர்., பேசும்போது, அவரை எப்படியெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என்று சிலருக்கு பயிற்சி கொடுத்து, தயார் நிலையில் வைத்திருந்தது தி.மு.க., சட்டசபையில் தி.மு.க., ஆட்சியை எதிர்த்து எம்.ஜி.ஆர்., பேச ஆரம் பித்தவுடன், மேலே உள்ள லாபியில் இருந்து அவர் மீது சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டன. அதில் ஒரு செருப்பு நேராக எம்.ஜி.ஆர்., முகத்தின் மீதே விழுந்தது. தனக்கு எதிரா க சதி நடப்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., 'சட்டசபை மாண்பு இறந்து விட்டது' என்று கூறி வெளியேறி விட்டார். அப்போதும் விடா மல் அவர் மீது செருப்புகளை வீசினர், தி.மு.க.,வினர். அதுமட்டுமா... 1973ல் திண்டுக்கல் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் மாயத்தேவரை -ஆதரித்து பிர சாரம் செய்ய, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு சென்றார் எம்.ஜி.ஆர்., அங்கும் அவர் மீது சரமாரியாக கற்களும், சோடா பாட்டில்களும் வீசப் பட்டன. போலீசார் தான் எம்.ஜி.ஆரை சுற்றி வளைத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதேபோன்று தான், 1973ல் ஈ.வெ.ரா., இறுதி ஊர்வலம் சென்னை அண்ணா சாலையை கடக்கும்போது, ஊர்வலத்தில் நடந்து சென்ற எம்.ஜி.ஆர்., மீது செருப் புகள் வீசப்பட்டன. இறுதிவரை நடந்து சென்றால் கலவரம் மூளும் என நினைத்த எம்.ஜி.ஆர்., உடனே அங்கிருந்--து புறப்பட்டு விட்டார். இப்படி தி.மு.க., வினரை வைத்து, எம்.ஜி.ஆர்., மீது அநாகரிக தாக்குதல் நடத்த துாண்டியவர் கருணாநிதி. கடந்த 1980 கால கட்டத்தில் சென்னை தம்பு செட்டி தெருவில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், 'என் மீது ஊழல் குற்றச் சாட்டை ஆதாரத் துடன் சுமத்த உனக்கு ஆண்மை இருக்கிறதா?' என்று கேட்டு, எம்.ஜி.ஆருக்கு குழந்தை இல்லாததை சுட்டிகாட்டும் விதமாக, 'நீ ஒரு பேடி' என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார் கருணாநிதி. கருணாநிதி இப்படி பிற தலைவர்கள் மீது உமிழ்ந்த வெறுப்பு விதைகள் தான், 50 ஆண்டுகளாக தொடரும் கருணாநிதி வெறுப்பு அரசியலுக்கு காரணம்! 'திராவிட இயக்கத்துக்குள் பார்ப்பன பெண்ணை ஊடுருவச் செய்தவர் எம்.ஜி.ஆர்.,' என்று கூறிஉள்ளார் திரு மாவளவன்; இது தவறு . கடந்த 1971ல் கருணாநிதி முதல்வராக வெற்றி பெற்ற உடன், வடசென்னை கவுன்சிலராக இருந்த பிராமண பெண்ணான காமாட்சி ஜெயராமன் திறமையானவர் என்பதால், அவரை சென்னை மேயராக்கினார் கருணாநிதி. அதுபோலதான், ஜெயலலிதாவை பிராமண பெண் என்று பாராமல், அவரது பேச்சுத் திறமை, ஆங்கிலப் புலமை, நுட்பமான அறிவு திறன் போன்ற காரணங்களுக்காக, 1983ல் ராஜ்யசபா எம்.பி., ஆக்கினார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திராவிடக் கட்சியின் தலைவராவதற்கு காலம்தான் பாதை போட்டுக் கொடுத்ததே தவிர, திருமாவளவன் சொல்வதைப் போல், எம்.ஜி.ஆர்., அல்ல! அதுசரி... 2006ல் அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க போயஸ் தோட்டம் சென்ற திரு மாவை பிளாஸ்டிக் சேரில் அமர வைக்காமல், தான் அமர்ந்திருக்கும் சோபாவில் அமர வைத்து, ஒரு சகோதரனைப் போல் பாசம் காட்டினாரே ஜெயலலிதா... அப்போது அவரை ஒரு பட்டியலின பெண்ணாக நினைத்துக் கொண்டாரோ? அவர் மறைந்த பின்பு தான், அவர் பார்ப்பன பெண் என்பது திருமாவுக்கு தெரிந்திருக்கிறது போலும்! உயிரைக் கொல்லும் அரளி விதையை விதைத்து விட்டு, ஆப்பிள் பழத்தை அறுவடை செய்ய முடியாது என்பதற்கு கருணாநிதியே உதாரணம். இதை திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்!