இதே நாளில் அன்று
செப்டம்பர் 21, 1927தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில்1927ல், இதே நாளில் பிறந்தவர்,குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் எனும் ஜி.கே.வெங்கடேஷ்.இவர், தன் அண்ணன்ஜி.கே.எஸ்.பதியிடம் வீணை இசையை கற்றார். தொடர்ந்து, மேடைகளில் வாசித்தார். கர்நாடகவானொலியில் பாடகரானார். பின், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் எஸ்.சுப்பையா நாயுடுவிடம், இவரும் உதவியாளராக சேர்ந்தார்.தன் நண்பர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்திஇசையமைத்த, பணம் திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றினார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் படங்களுக்கு இசையமைத்து புகழடைந்தார்; அவரையும் பாட வைத்தார். கன்னடத்தில், பி.பி.ஸ்ரீனிவாசை அறிமுகம் செய்தார்.இவரிடம் கிடார் இசைத்தார் இளையராஜா. இவரை, சிங்கார வேலன், மெல்ல திறந்தது கதவு படங்களில் நடிக்க வைத்தார் இளையராஜா. தமிழில், பொண்ணுக்கு தங்க மனசு, பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இவர், 1993, நவ., 13ல் தன் 66வது வயதில் மறைந்தார்.'ராஜா'வின், 'ராஜாதிராஜா' ஜி.கே.வி.,பிறந்த தினம் இன்று!