உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜனவரி 17, 1917கேரளாவைச் சேர்ந்த கோபாலன் மேனன் - சத்யபாமா தம்பதியின் மகனாக, இலங்கையின் கண்டி அருகில் உள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில், 1917ல் இதே நாளில் பிறந்தவர், மருதுார் கோபாலன் ராமச்சந்திரன் எனும் எம்.ஜிஆர்.,அங்கு ஆசிரியராக இருந்த கோபாலன் மறைவுக்கு பின், சத்யபாமா தன் இரு மகன்களுடன், தமிழகத்தின் கும்பகோணம் வந்தார். வறுமையால் படிக்க முடியாமல் அண்ணன் சக்கரபாணியும், எம்.ஜி.ஆரும் நாடகங்களில் நடித்தனர்.சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆர்., ராஜகுமாரி திரைப்படத்துக்கு பின் முன்னணி நாயகன் ஆனார். அண்ணாதுரையால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.,வில் இணைந்து, பொருளாளராக வளர்ந்தார். இவரை கருணாநிதி வெளியேற்றியதால், தன் தொண்டன் துவங்கிய, அ.தி.மு.க.,வில் 1972ல் இணைந்தார்.அதன் பொதுச்செயலராகி, 1977 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்தி, தமிழக முதல்வரானார். 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து, பள்ளிகளில் சத்துணவு, இலவச சீருடை உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்திய இவர், 1987, டிசம்பர் 24ல் தன் 70வது வயதில் மறைந்தார்.'புரட்சி தலைவர்' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ