உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 16

இதே நாளில் அன்று: நவ. 16

நவம்பர் 16, 1916 கர்நாடக மாநிலம், மைசூரில் அரசு ஊழியரான என்.நரசிம்மாச்சார் -மகனாக, 1916ல் இதே நாளில் பிறந்தவர், மைசூர் நரசிம்மாச்சார் ஸ்ரீநிவாஸ் எனும் எம்.என்.ஸ்ரீநிவாஸ். இவர், மைசூர் பல்கலையில் தொடக்க கல்வி மற்றும் பட்டப் படிப்பை முடித்தார். சமூக தத்துவம், சமூகவியலில் முதுகலை, சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய சமூகவியலின் முன்னோடிகளில் ஒருவரான இவர், கிராமப்புற சமூக அமைப்பு குறித்த ஆழமான கள ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, ‘கூர்க்’ பகுதி மக்களின் வாழ்க்கை முறை குறித்து இவர் எழுதிய நுால், உலகளவில் கவனம் பெற்றது. ‘த ரிமெம்பர்டு வில்லேஜ், சோஷியல் சேஞ்ச் இன் மாடர்ன் இந்தியா’ உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார். பரோடா, டில்லி பல்கலைகளில் பேராசிரியராக பணியாற்றினார். பெங்களூரில் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதிலும் பங்காற்றினார். 1977ல் பத்ம பூஷண் விருது பெற்றார். இந்திய சமூகத்தை புத்தகங்கள் வழியாக மட்டுமின்றி, நேரடி கள ஆய்வுகள் மூலமாகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்திய சமூகவியல் துறைக்கு ஆற்றிய மாபெரும் சேவைகளுக்காக நினைவுகூரப்படும் இவர், தன் 83வது வயதில், 1999 நவம்பர் 30ல் காலமானார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ