உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 18

இதே நாளில் அன்று: நவ. 18

நவம்பர் 18, 1910 மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டம், ஓய்ரி கிராமத்தில் கோஷ்டா பிஹாரி தத் – காமினி தேவி தம்பதியின் மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர், படுகேஷ்வர் தத். பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்த இவர், கான்பூரில் உயர்கல்வி பயின்றபோது, புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, இளம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் இணைந்து, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ அமைப்பில் செயல்பட்டார். 1929, ஏப்ரல் 8ல், டில்லி மத்திய சட்டசபைக்குள் பகத்சிங்குடன் இணைந்து இரண்டு குண்டுகளை வீசினார். அது வெடித்து சட்டசபை வளாகமே புகை மண்டலமாக மாறியது. இந்த வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவால், 1938ல் விடுதலையான இவர், 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மீண்டும் சிறை சென்றார். நாட்டின் விடுதலைக்காக வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்த இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 1965, ஜூலை 20ல், தன் 54வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை