உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

'தரமா எப்படி கட்ட முடியும்?'புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் புதிதாக 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, ராஜ்யசபா எம்.பி., சிதம்பரம் திறந்து வைத்தார்.அப்போது பேசுகையில், 'கல்லணை 2,000 ஆண்டுகளுக்கு முன்பும், தஞ்சாவூர் பெரிய கோவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்டன; புயல், வெள்ளம், மழை, இடி அனைத்தையும் தாங்கி நன்றாக தானே உள்ளன.'ஒரு கட்டடத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்பதில்லை; நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய தரமான கட்டடம் கட்ட வேண்டும். இந்த கட்டடத்தை ஒப்பந்ததாரர் நல்ல முறையில் சிறப்பாக கட்டியிருப்பார் என்று நம்புகிறேன்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அரசு கட்டடங்கள் கட்டுறதுக்கு 20 முதல் 30 சதவீதம் கமிஷனே போயிடும்... மீதி பணத்தில், ஒப்பந்ததாரர் லாபமும் பார்த்து, தரமான கட்டடத்தை எப்படி கட்டுவாரு?' என கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ellar
ஆக 10, 2024 17:16

திரு சிதம்பரம் அவர்கள் வெளிநாட்டில் படித்தவர் அவருக்கு தெரியாதா 1940 45 களில் இந்தியாவும் ஜப்பானும் ஜெர்மனியும் ஒரே தரம் உள்ள நிலையில் பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தன.......அதற்கு பின்னர் டெண்டர் முறை கொண்டு வந்து இந்தியாவில் விலை முக்கியத்துவம் பெற்றதும் ஜெர்மனி டெண்டர் முறையில் தரம் முக்கியத்துவம் பெற்றதும் இரண்டு நாடுகளிலும் மழையும் மடுமாக மாற்றி விட்டன என்பது அது தெரியாமல் எவ்வாறு இவர் பெரிய படிப்பை படித்தார்?


D.Ambujavalli
ஆக 09, 2024 17:01

கரிகாலன், ராஜராஜன் காலத்தில் அதிகாரிகளுக்கு இந்த சதவீதக் கணக்கு தெரியவில்லை அவர்களோடு சாப்பிடுவதா ? இங்கு 40% வாங்கி அடிமுதல் தலை வரை தின்ற பிறகு பத்து செங்கல் மிஞ்சினாலே அதிகம்