உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

'நிருபர்கள் குடிக்க மாட்டார்கள்...!'

உள்ளாட்சிதத் தேர்தல் குறித்த பா.ம.க., ஆலோசனை கூட்டம், ராமதாஸ் தலைமையில் மதுரையில் நடந்தது. நிருபர்களிடம் ராமதாஸ் பேசும்போது, 'தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என வலியுறுத்தியவர்கள் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்கின்றனர் என்று முதல்வர் கூறியுள்ளார். கள்ளச்சாராய விற்பனை என, பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. யார் விற்கிறார்கள் என, தெரிவிக்க வேண்டும். 'கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும். அவர்களை சவுக்கால் அடித்து, ஆயுள் தண்டனையும் வழங்கலாம். மற்ற கட்சி தலைவர்களைப் போல் எங்கள் கட்சியில் குடிப்பவர்கள் பதவியில் இல்லை. குடிப்பவர்கள் பொறுப்புகளிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்றார். உடனே, நிருபர் ஒருவர், 'எந்த கட்சி தலைவர் குடிக்கிறார்...?' என, மடக்கினார். அதற்கு அவர், 'உங்களுக்கே தெரியும்... நான் எதற்கு சொல்ல வேண்டும்... நிருபர்கள் குடிக்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்...' என்றதும், நிருபர்கள் அனைவரும், வாயைப் பொத்தி சிரித்தனர்.

இது நம்மூர், 'ஸ்டைல்...!'

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த அம்மம்பாக்கம், சீத்தஞ்சேரி பகுதிகளில் நடைபெறும் ஏரிகள் சீரமைக்கும் பணிகளை உலக வங்கி தொழில்நுட்ப வல்லுனர் தலைவர் போன்வாக்கர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர், 'ஏரிகள் சீரமைக்கும் பணிகளை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள்... கால அட்டவணை எங்கே... தயார் நிலையில் உள்ளதா...?' என, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் பதில் பேச முடியாமல் விழித்தனர். உலக வங்கி வல்லுனர், 'அப்-செட்' ஆனார். பின்னால் வந்த ஊழியர் ஒருவர், 'கால அட்டவணை போட்டு பணிகள் செய்வதெல்லாம் அமெரிக்கன் ஸ்டைல்... போற போக்குல செய்யறது தான் நம்மூர் ஸ்டைல்...' என, கிண்டலடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி