உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?

எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் நகராட்சியில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., -- எம்.பி., பாலு, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் அன்பரசன் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் குன்றத்துாரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு அரசு கலை கல்லுாரி கொண்டு வந்ததற்கு காரணம் செல்வப்பெருந்தகையாக இருக்கலாம்; ஆனால், அந்த கல்லுாரியை குன்றத்துாருக்கு கொண்டு வந்ததற்கு நான் தான் காரணம்' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'ஏற்கனவே நம்ம எம்.பி.,க்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்... இதுல, கல்லுாரியை செல்வப்பெருந்தகை கொண்டு வந்தார்... அதை நான் இங்கே கொண்டு வந்தேன்னு அமைச்சர் பேசுறதை பார்த்தால், எம்.பி., ஒண்ணும்பண்ணலைன்னு குத்திக் காட்டுறாரா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 01, 2024 17:10

விடுங்க கூட்டணிகட்சிக்காரருக்குக் கூட அப்படி ஒரு credit கிடைக்க விட்டுவிடுவோமா ? Sticker ஒட்டுவது எங்க குலத்தொழில் ஆச்சே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை