உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சொல்லாம சொல்றாரோ?

சொல்லாம சொல்றாரோ?

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சீரமைக்கப்பட்ட குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா, சென்னை, புளியந்தோப்பில் நடந்தது.இதில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'நீதி கட்சி ஆட்சியில் இருந்த போது, தியாகராயரால் சில பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தான், காமராஜர் எல்லாருக்கும்கிடைக்கும் வகையில் பரவலாக்கினார். அதன் பின் ஆட்சிக்கு வந்த, எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தை, 'சத்துணவு திட்டம்' என்று மாற்றினார்.'அதையடுத்து, கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற பின், அது உண்மையான சத்துணவாக இருக்க, முட்டையும் சேர்த்து வழங்கினார். தற்போது, பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் சேர்த்து வழங்கி வருகிறோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'காமராஜர் ஆட்சியில் சத்துணவு தரலை... நாங்க தான் தந்தோம்னு முதல்வர் சொல்லாம சொல்றாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மார் 10, 2025 23:51

சாப்பிடத்தான் பள்ளிக்கு வருகிறார்கள். படிக்க அல்ல என்பது தான் உண்மை. மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தை படிக்கத்தெரியவில்லை என்ற செய்தி இதே தினமலரில் சென்ற மாதம் வந்தது.


T.S.SUDARSAN
மார் 10, 2025 11:27

சௌராஷ்ட்ரா ஹை ஸ்கூல், மதுரையில் 1933 அன்று திரு மாமேதை துளசிராமனால் ஆரம்பிகப்பட்ட மத்திய உணவு திட்டம் ,பின்னர் திரு காமராஜ் அவர்களால் பாராட்டப்பட்ட மத்திய உணவு திட்டத்திணி ,அவரே தமிழ்நாடு பள்ளிகளில் ஆரம்பித்து திரு MGR அவர்களால் வளர்க்கப்பட்டு இப்போ திரு ஸ்டாலினால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தன் புகழ் பரப்பப்படுகிறது. அம்மா உணவகம் செல்வி ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம். காலை உணவு திட்டம் திரு ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டதிட்டம் . இதுவே உண்மை.


D.Ambujavalli
மார் 10, 2025 06:40

யாரோ ஒருவர் பத்துப் பிள்ளைகளுக்கு உணவளித்து முன்னோடியாகிவிட்டாராம், மாநிலம் முற்றுமுள்ள பசித்த வயிறுகள் வாழ்த்தினாலும் அந்தப் புகழை இவர்கள் மறைத்துவிடுவார்களாம் திராவிட மாடல் என்றுமே எதிலும் ஸ்டிக்கர் மாடல்தானே


முக்கிய வீடியோ