உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எட்டிக்கூட பார்க்க மாட்டார்!

எட்டிக்கூட பார்க்க மாட்டார்!

சென்னை, போரூரில், மதுரவாயல் பகுதி தி.மு.க., சார்பில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு பங்கேற்றனர்.கடைசியாக பேசிய அமைச்சர் வேலு, ஒரு மணி நேரம் கடந்தும் தன் பேச்சை முடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பான டி.ஆர்.பாலு, மேடையில் இருந்து புறப்பட, 'நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்' என, கட்சியினர் கூறினர்.பாலு செல்வதை பார்த்த வேலு, தன் பேச்சை அவசரமாக முடித்தார். இருப்பினும், பாலு நிற்காமல் சென்று விடவே, வேலுவும், மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதியும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மூத்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'சீக்கிரமே தேர்தல் வருது... இவர் இப்பவே கட்சியினரை மதிக்காம இப்படி நடந்துக்குறாரே... ஜெயித்து மீண்டும் எம்.பி., ஆனா எட்டிக்கூட பார்க்க மாட்டார்...' என, புலம்பியபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ