உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஜலதோஷம் பிடிச்சிடும் போல!

ஜலதோஷம் பிடிச்சிடும் போல!

மத்திய சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தயாநிதியை ஆதரித்து, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், ராயப்பேட்டையில் நடந்தது.காங்., மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜசேகரன் பேசுகையில், 'மக்கள் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தயாநிதி. கவுன்சிலர் என்ற முறையில், அவரிடம் நான் கேட்ட சில பணிகளை எம்.பி., மேம்பாட்டு நிதியில் செய்து கொடுத்தார். லயோலா கல்லுாரியில் கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகள் படிக்க, அட்மிஷன் வாங்கி தந்துள்ளார்' என, பாராட்டி பேசினார்.இதைக் கேட்ட காங்., தொண்டர் ஒருவர், 'இன்னும் 20 நாட்களுக்கு நம்ம வேட்பாளர் பிரசாரம் செய்யணும்... இவர் வைக்கிற ஐஸ்ல அவருக்கு ஜலதோஷம் பிடிச்சிடும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஏப் 04, 2024 03:56

இவர் , வாரிசுகள் , உறவுகளுக்கு எத்தனை 'சகாயம்' செய்தாரோ , அதற்கு நன்றிக்கடன் இந்த ஐஸ் பாளம்


G.Kirubakaran
ஏப் 03, 2024 10:00

லயோலா கல்லூரியில் கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகள் படிக்கச் சீட் வாங்கி கொடுத்தாராம் தயாநிதி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி மூலம் ஏழை மாணவர் ஒருவருக்காவது சீட் வாங்கி கொடுத்தாரா?


புதிய வீடியோ