உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அண்ணனுக்கு பிரச்னையே வராது!

அண்ணனுக்கு பிரச்னையே வராது!

மின் கட்டண உயர்வை கண்டித்து, மதுரையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பங்கேற்றார். அப்போது பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை; ஆனால், சிறப்பாக செயல்படுவதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி, குப்பை வரினு, வெறும் வரிகளா தான் போட்டுட்டு இருக்காங்க. வரிக்குதிரையில் உள்ள வரிகளை கூட எண்ணிவிடலாம்; ஆனா, தி.மு.க., அரசு போட்ட வரிகளை எண்ணவே முடியாது' என்றார்.இதைக்கேட்ட அக்கட்சி நிர்வாகி ஒருவர், 'அரசுக்கு எதிரா சீரியஸா பேசினா மக்களும் கண்டுக்க மாட்டாங்க... ஆவேசத்துல ஏடாகூடமா பேசி வழக்கு தான் வாங்கணும்... எப்பவுமே காமெடியா பேசுற நம்ம அண்ணனுக்கு அந்த பிரச்னையே வராது...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ