உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஓடி, ஒளிய வேண்டியதில்லையே!

ஓடி, ஒளிய வேண்டியதில்லையே!

தஞ்சாவூர் மாவட்டத்தில், எப்போது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானாலும், பத்திரிகையாளர்களுக்கு, பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் அடங்கிய பட்டியலை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்குவது வழக்கம். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான போது, அந்த விபரங்கள் வழங்கப்படவில்லை.இதற்கு, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16வது இடத்தில் இருந்த தஞ்சாவூர், இந்தாண்டு 26வது இடத்திற்கு சென்றது தான் காரணம். மேலும், அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை வெறும் எட்டு பள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தன.பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், பொறுப்பு அமைச்சராக உள்ள மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதம் இப்படி சரிந்ததால் தான் எந்த தகவலையும் அதிகாரிகள் வழங்கவில்லை என, கூறப்பட்டது.நிருபர்கள் சிலர், 'கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே மாணவர்கள் மீது கவனம் செலுத்தி இருந்தால், இப்ப ஓடி, ஒளிய வேண்டியதில்லையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 15, 2024 06:12

மற்ற மாவட்டங்களில் முழுத் தேர்ச்சிக்காக வாழ்த்த கலெக்டர்கள் முன் வருகையில், சிறு சாதனைக்குக்கூட குதித்துக்கொண்டு வரும் அமைச்சர் குரலையே காணோம் என்பது இதனால்தானோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை