உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மக்கள் மேல பழி போடுறாரே!

மக்கள் மேல பழி போடுறாரே!

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சிந்தகம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து ஓட்டளித்த அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, நிருபர்களுக்கு பேட்டிளித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் திராவிட கட்சிகள் வந்த பிறகு, தேசிய கட்சியான காங்கிரஸ் சரிந்தது. காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், பா.ஜ.,வுடன் கள்ள உறவில் உள்ளது. ஆனால், அவர்கள் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கள்ள உறவில் இருப்பதாக கூறுகின்றனர். பல்வேறு வழக்குகளில் பா.ஜ., அரசு, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் போட்டி. மூன்றாவது கட்சியை மக்கள் விரும்பவில்லை' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மூன்றாவது கட்சியை இவங்க ரெண்டு கட்சிகளும் விரும்புறது இல்ல... மக்கள் மேல பழி போடுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஏப் 26, 2024 14:29

Another good for nothing so called leader of AIADMK Last parliament election how he was driven out of Karur constituency was an interesting His contribution as MP of Tamilnadu for so many years is NIL


Rengaraj
ஏப் 26, 2024 13:45

மூன்றாவது கட்சியை மக்கள் விரும்பவில்லை என்று எதை வைத்து சொல்கிறார்? வீடுவீடா சென்று சர்வே எடுத்தாரா?? அல்லது தெரு தெருவா அலைஞ்சு போறவர்றவங்களை கேட்டு முடிவு செஞ்சாரா? நாலைந்து செய்தித்தாளை பாத்துட்டு எதையாவது பேசினா அது உண்மையாயிடுமா ?


D.Ambujavalli
ஏப் 26, 2024 06:41

பன்னீருடன் 'ஊடல்' இருந்தபோது பஞ்சாயத்து செய்து கவர்னர் 'கைகோத்து' விட்ட போதெல்லாம் பாஜவுடன் இழையோ இழையென்று உறவாடி விட்டு, இன்று பேச்சு மாறுகிற உங்கள் கதை இரண்டு கட்சிகளும் அமலாக்கம், வ வரி சோதனைகளிலிருந்து தப்ப புழக்கடை உறவில் உள்ளது தெரியுமே


முக்கிய வீடியோ