உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அமைச்சரை நெளிய வச்சுட்டாரே!

அமைச்சரை நெளிய வச்சுட்டாரே!

தென்சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், மத்திய பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, 'அமித் ஷா தலையில் ஒருவேளை முடி முளைத்தாலும் முளைக்குமே தவிர, தமிழகத்தில் தாமரை மட்டும் மலரவே மலராது...' என்றார்.இதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, அமைச்சர் சுப்ரமணியன் தன் தலையை கர்சீப் வைத்து துடைத்தார். இதை கவனித்த கட்சி நிர்வாகி ஒருவர், 'அமித்ஷாவை கலாய்த்து, நம்ம அமைச்சரை நெளிய வச்சுட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Ambujavalli
ஏப் 19, 2024 06:39

அசெம்பிளியில் எண்ணிக்கை குறைந்து விடும் நிலையில் கவர்னர்/ பாஜ சொல்படி பன்னீருடன் கைகுலுக்கிய போது இனித்த உறவு, இப்போதுதான் குறைகள் எல்லாம் தெரிகிறது


panneer selvam
ஏப் 18, 2024 18:59

It is the habit of DMK making fun on individuals started even in Annadurai period just look again , how Kamaraj was abused by DMK founder Annadurai DMK is known for not talking about development , job creation , agriculture development but they highlight only freebies so that a portion can be stolen by DMK functionaries , Hindi , North Indians and making fun on opposition leaders


Bahurudeen Ali Ahamed
ஏப் 18, 2024 17:36

யாராக இருந்தாலும் சரி, உருவ கேலி செய்வது மிகக்கேவலமானது, கண்டிக்கப்படவேண்டியது


கண்ணன்
ஏப் 18, 2024 09:41

படிப்பறிவற்ற கூட்டம்


D.Ambujavalli
ஏப் 18, 2024 06:49

வழுக்கைத்தலை பிரதிநிதிகள், கட்சி வேறுபாடின்றி இவர் கருத்துக்கு எதிர்க்குரல் எழுப்ப வேண்டும் அதிமுக ஜெயக்குமார் உள்பட


J.V. Iyer
ஏப் 18, 2024 06:37

இப்படி கேவலமாக பேசுவதுதானே இவர்கள் தொழில்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை