உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  மூதாட்டியை கேலி செய்யலாமா?

 மூதாட்டியை கேலி செய்யலாமா?

வேலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி, தாராபடவேடு அரசினர் நடுநிலை பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் சுப்புலட்சுமி, வேலுார் தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் ஆகியோர், மருத்துவ சேவைகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது, காட்பாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர், கதிர் ஆனந்த் எம்.பி.,யிடம், முகாமில் தனக்கு மருத்துவ சேவைகளை வழங்காமல், அலைக்கழிப்பதாக ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டினார். உடனே, மருத்துவர்களை அழைத்து, மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கும்படி, எம்.பி., உத்தரவிட்டார். அப்போது, அங்கிருந்த வேலுார் மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன், 'பாட்டி ஏன் இப்படி கோவப்படுறே... உனக்கு ரத்த அழுத்தம் இருக்கா...' என கேட்டு, கிண்டல் அடித்தார். இதை பார்த்த ஒருவர், 'மாற்றுத்திறனாளி மூதாட்டியை சுகாதார அலுவலரே இப்படி கிண்டல் செய்யலாமா...' என, முகம் சுளித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !