உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மகன் கேட்டால் மறுக்க முடியுமா?

மகன் கேட்டால் மறுக்க முடியுமா?

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், வட சென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி ஏற்பாட்டில், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நலத்திட்ட உதவிகளை வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், 'தி.மு.க., மட்டுமே தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்காக சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனி துறை துவங்கியது, முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரை வைத்ததும் அவர் தான். 'அந்த துறையை, தற்போதைய முதல்வரும் தன் வசம் வைத்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சட்டசபையில் நான் பேசியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்க வேண்டும் என கேட்டேன். முதல்வர் அந்த கோரிக்கையை ஏற்று, ஆணை வெளியிட்டார்...' என்றார். இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'மகன் கேட்டால், முதல்வரால மறுக்க முடியுமா...?' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
செப் 26, 2025 07:23

அப்பாவும் மகனும் சுய தம்பட்டம் அடிப்பதை எவரும் மிஞ்ச முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நகரங்களில், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பாலியல் வழக்குகள் தினந்தோறும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. கழகக் கண்மணிகளின் அநியாயங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அப்பாவும் மகனும் நாட்டில் தமிழகத்தில் தங்களது ஆட்சி சிறப்பாக உள்ளது என்று சுய தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை