உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  போஸ் கொடுக்க வந்துட்டாரோ?

 போஸ் கொடுக்க வந்துட்டாரோ?

சென்னை மாநகராட்சியின் அம்பத்துார் மண்டலத்தில், பணி நிரந்தரம் கேட்டு, ஐந்து மாதங்களுக்கும் மேலாக போராடி வந்த துாய்மை பணியாளர்களை சந்தித்து சமரசம் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, போராட்டத்தை முடித்து வைத்தார். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மற்றும் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இணைந்து, 1,390 துாய்மை பணியாளர்களுக்கும், மட்டன் பிரியாணியுடன் விருந்து வைத்தனர். நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதால், தாமதமாக வந்த அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட கட்சியினர், மண்டபத்தின் வெளியிலேயே நின்றிருந்தனர். இதை பார்த்த தொண்டர் ஒருவர், 'நம்ம ஏரியாவில் பல மாதங்களாக நடந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை, எம்.எல்.ஏ., கண்டும் காணாமல் இருந்துட்டு, போராட்டத்தை முடிக்கிறப்ப மட்டும், போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்துட்டாரோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 28, 2026 16:21

தலைமை பச்சைகொடி காட்டாமல் அம்பத்தூர் MLA ஜோசப் சாம்வேல் போராட்டம் நடக்குமிடத்துக்கு வந்து ஏதாவது இசக்குபிசக்கு ஆயிட்டா..? அதான் போராட்டம் நடக்கும்வரை Absent ..


D.Ambujavalli
ஜன 28, 2026 06:26

சம்பந்தம் இருக்கோ, இல்லையோ, இந்த 'god father' மாநகராட்சி விவகாரங்களில் மூக்கை நுழைத்து ஓசியில் புகழைத் தட்டிக்கொள்கிறார் ஆனால், தொகுதி எம். எல். ஏ யாருக்கு வந்த விருந்தோ என்று இருந்துவிட்டு கறி விருந்துக்கு மட்டும் பந்திக்கு முந்துகிறார் போலிருக்கு


சமீபத்திய செய்தி