உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இப்ப தலைகாட்ட மாட்டாரு!

 இப்ப தலைகாட்ட மாட்டாரு!

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன், சமீபத்தில் திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 'திருப்பரங்குன்றத்தில் நாங்கள்தீபம் ஏற்ற சொன்னோம்; ஆனால், தி.மு.க., நெருப்பை ஏற்றி இருக்கிறது. இது, அரசியல் நெருப்பு; தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திலும் புகையும். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன் எல்லை தாண்டி பேசுகிறார். 'திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி, விருதுநகர் லோக்சபா தொகுதியில் வரும். விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் எதை பற்றியும் வாய் திறக்க மாட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஓட்டு கேட்க மட்டும் தான் வருவார்...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இப்ப சட்டசபை தேர்தல் வர்றதால, மாணிக்கம் தாகூர் தலைகாட்ட மாட்டாரு... 2029 லோக்சபா தேர்தல் நேரத்தில் தான் வெளியே வருவார்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ