வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மைக் கிடைத்துவிட்டால், என்ன கூட்டம், யாருக்காக நடக்கிறது என்று எதையுமே யோசிக்காமல் தன் சாதனைகளை அடுக்குவதே பலரது தொழிலாக இருக்கிறது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நான் 60 ஆண்டுகள் கட்சிப்பணி செய்தவன். என் வயது 86. முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் துவங்கிய நான், 42 ஆண்டுகளாக ரசிகர் மன்ற மாவட்டச் செயலராக இருந்தேன். தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டதும் கட்சி துவங்க வேண்டும் என, முதலில் தீர்மானம் நிறைவேற்றியவன் நான்.'ஈ.வெ.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா, ஈ.பி.எஸ்., தான் நம் மூன்றெழுத்து மந்திரங்கள். அதேபோல என் பெயரில் தமிழ் மூன்றெழுத்து, மகன் மூன்றெழுத்து, உசேன் மூன்றெழுத்து...' என்றார்.மூத்த தொண்டர் ஒருவர், 'எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கூட்டத்தில் அவர் புகழ் பாடுவார்னு பார்த்தா, இவரது சுயபுராணத்தைப் பாடுறாரே...' என, முணுமுணுத்தவாறு நடையைக் கட்டினார்.
மைக் கிடைத்துவிட்டால், என்ன கூட்டம், யாருக்காக நடக்கிறது என்று எதையுமே யோசிக்காமல் தன் சாதனைகளை அடுக்குவதே பலரது தொழிலாக இருக்கிறது