உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தெரிந்து தான் பேசுகிறாரா?

தெரிந்து தான் பேசுகிறாரா?

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கம், பாதாள சாக்கடை திட்டம் பூமி பூஜை விழாவில் அமைச்சர்கள் நேரு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பங்கேற்றனர்.இதில் நேரு பேசுகையில், 'தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் கூட, அவற்றை எல்லாம் சமாளித்து, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறார். மத்திய அரசு எங்களுக்கு நிதி ஒதுக்குவது இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் வாயிலாக 1,600 கோடி ரூபாய் செலவில் பணி நடந்து வருகிறது' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார்... ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வேலை நடப்பதாகவும் சொல்கிறார்... என்ன பேசுறோம்னு தெரிந்து தான் பேசுகிறாரா...?' என முணுமுணுத்தபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி