உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மண்டலமா சுருக்குவது சரியா?

மண்டலமா சுருக்குவது சரியா?

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், பா.ஜ., நிர்வாகிகள், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பல பகுதிகளிலும் பேனர்கள் வைத்துள்ளனர். அதேபோல், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர். அதே நேரம், கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் படத்தை போட்டு, 'கொங்கு மண்டலத்தின் பெருமைமிகு அடையாளம்' என்ற, பேனர்களை வைத்துள்ளனர். இதை பார்த்த பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., கட்சியில் நீண்ட காலமாக தேசப்பற்றுடன் உழைத்த சி.பி.ஆருக்கு இப்படி ஜாதி சாயம் பூசிட்டாங்களே' என, முணுமுணுத்தார். சக நிர்வாகியோ, 'அதானே... நாடு முழுக்க பிரபலமான சி.பி.ஆரை கொங்கு மண்டலத்துடன் சுருக்குவது சரியில்லை தான்...' என, ஆமோதித்தபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை