வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாவம், குடும்பத்துக்குழப்பம் தங்கள் தலையில் விடிந்துவிடுமோ என்ற பதற்றம் இருக்கத்தானே செய்யும் பொதுவெளியில் விட்டுக்கொடுக்காமல் பேசலாம் ஆனால் தொண்டர்களுக்கு உள்விவரம் தெரியாதா?
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவரான தீரன், ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்தார்.வெளியில் வந்து அவர் அளித்த பேட்டியில், 'பா.ம.க., வலிமையாக இருந்தால்தான் எங்களுக்கு மரியாதை கிடைக்கும். இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் நிறுவனரை சந்தித்தேன்.'இதேபோல் அன்புமணியையும் சந்தித்து பேசுவேன். பா.ம.க.,வில் நிலவும் பிரச்னை விரைவில் தீர்ந்து விடும். இருவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். நீர் அடித்து நீர் விலகாது. பா.ம.க., உடைவதற்கு தொண்டர்கள் அனுமதிக்க மாட்டர்கள்' என்றார்.சீனியர் நிருபர் ஒருவர், 'இப்ப தொண்டர்களாலயா கட்சிக்குள்ள பிரச்னை வந்திருக்கு... குடும்பத்துக்குள்ள அல்லவா குழப்பம் வெடிச்சிருக்கு...' எனக்கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
பாவம், குடும்பத்துக்குழப்பம் தங்கள் தலையில் விடிந்துவிடுமோ என்ற பதற்றம் இருக்கத்தானே செய்யும் பொதுவெளியில் விட்டுக்கொடுக்காமல் பேசலாம் ஆனால் தொண்டர்களுக்கு உள்விவரம் தெரியாதா?