உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மக்கள் மனசு மாறணும்!

மக்கள் மனசு மாறணும்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை மருத்துவர் ராமசாமி பேசினார். அவர் பேசுகையில், 'அதிவேகத்தை தவிர்த்து, கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என, போலீசார் அறிவுறுத்துகின்றனர். ஆனால், அதிவேகத்துடனும், அவசரத்துடனும் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு, காயங்களுடன் வரும் நோயாளிகள், உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் என, எங்களையும் அவசரப்படுத்துகின்றனர். 'போலீசாரின் அறிவுரைகளை கேட்காமல், சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு, அதே வேகத்தை இங்கும் காட்டுவது நியாயமா...?' என்றார். கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், 'நியாயம் இல்லை தான்... மக்களா மனசு மாறினா தான் இதற்கு விடிவு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ