உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அதான் இங்க இருக்கீங்க!

அதான் இங்க இருக்கீங்க!

அ.தி.மு.க., ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மதுரையில் நடந்தது. இதில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேசுகையில், 'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் மட்டுமே கட்சி, ஆட்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க என்ன அவசரம். அவர் என்ன எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா?'கூட்டணிக்கு யாராவது வருவரா என கடை விரித்து உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் இருப்பவர்கள் யாருக்கும் முதுகெலும்பு இல்லை. நான் அங்கு இருந்திருந்தால், 'உங்களால் கட்சிக்கு கெட்ட பெயர். ராஜினாமா செய்யுங்கள் என, கூறியிருப்பேன்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அதான் நீங்க இங்க இருக்கீங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ