வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அச்சடித்தவர்கள். பழைய Format ஐ. அப்படியே. வைத்திருந்து, தேதியை நிகழ்வை. மட்டும். மாற்றியிருப்பார்கள்
நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரையில், போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் காத்தாடி திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிய விபரங்கள், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில்’ என, அச்சிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிருபர்கள், பி.ஆர்.ஓ., அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சுதாரித்த அதிகாரிகள், ‘மு.க.ஸ்டாலின்’ என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டு, மீண்டும் செய்திக்குறிப்பை அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், ‘முதல்வர் மாறி அஞ்சு மாசமாகியும், அதிகாரிகளின் தி.மு.க., விசுவாசம் மாறலையே’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
அச்சடித்தவர்கள். பழைய Format ஐ. அப்படியே. வைத்திருந்து, தேதியை நிகழ்வை. மட்டும். மாற்றியிருப்பார்கள்