வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்சிக்காக உயிரைவிட்டு உழைக்க நாங்கள், கட்சி மாறி வருபவர்களுக்கு பதவி என்ற மாடல் உள்ளவரை தொண்டனிடம் உழைப்பை எதிர்பார்க்க முடியாது
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.இதில், அமைச்சரும், கட்சியின் வடக்கு மாவட்ட செயலருமான கீதாஜீவன் பேசுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மார்க்கண்டேயன், அனைவரையும் அரவணைத்து சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லாரும் அவருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும்' என்றார்.மூத்த நிர்வாகி ஒருவர், 'மார்க்கண்டேயன் அ.தி.மு.க.,வில் இருந்து நம்ம கட்சிக்கு வந்தவர்... அவரை நல்லாவே புகழுறாங்களே...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவங்க தானே இன்னைக்கு நம்ம ஆட்சியில், 'பவர்புல்' அமைச்சர்களா இருக்காங்க... இவங்களும், தலைமை வழியில் நடக்கிறாங்க...' என, 'கமென்ட்' அடித்தவாறுநடந்தார்.
கட்சிக்காக உயிரைவிட்டு உழைக்க நாங்கள், கட்சி மாறி வருபவர்களுக்கு பதவி என்ற மாடல் உள்ளவரை தொண்டனிடம் உழைப்பை எதிர்பார்க்க முடியாது