உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவர் பிழைக்க தெரியாதவர்!

இவர் பிழைக்க தெரியாதவர்!

சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'நான், எம்.பி.,யான போது, பா.ஜ.,விற்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. நான் நேரடியாக, எம்.பி., தேர்தலில் நின்று ஜெயித்து விட்டேன். அப்போது, பிரதமர் வாஜ்பாயிடம் சண்டை போட்டு, 1 கோடி ரூபாய் நிதியை, 2 கோடி ரூபாயாக வாங்கினேன்.'அதை, நான் சார்ந்த கட்சியில் யாரும் இல்லாததால், மாற்று கட்சியில் உள்ள நல்லவர்களை தேடி தேடி கொடுத்து, மக்கள் பணிக்கு செலவழித்தேன்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இவர் பிழைக்க தெரியாதவர்... இதே நம்ம திராவிட கட்சியினருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், வார்டுக்கு ஒரு பொறுப்பாளரை தனியா நியமிச்சி, கமிஷனை வசூலித்து குவிச்சி இருப்பாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க,மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ